நேற்று, அமெரிக்கச் சர்வதேச வளர்ச்சி அலுவலகம், துர்க்மேனிஸ்தான், ரஷியா, பாகிஸ்தான் முதலியவை, சீனாவின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குத் தொடர்ந்து மீட்புதவிப் பொருட்கள் மற்றும் சிகிச்சை உதவியை வழங்கி வருகின்றன.
அமெரிக்கச் சர்வதேச வளர்ச்சி அலுவலகம், சீனாவில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்களுக்கு வழங்கிய 8 இலட்சத்து 15 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பிலான மீட்புதவிப் பொருட்கள், நேற்று முற்பகல் சி ச்சுவான் மாநிலத்தின் சங் து நகர் சென்றடைந்தன.
துர்க்மேனிஸ்தான், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவியாக வழங்கிய பொருட்கள் நேற்றிரவு, சீன கான் சூ மாநிலத்தின் லான் ச்சோ நகரின் ச்சோங் ச்சுவான் விமான நிலையத்தை சென்றடைந்தன. ஆடைகள், போர்வைகள், தலையணைகள், மருந்துப் பொருட்கள், மருத்துவச் சிகிச்சை உபகரணங்கள் முதலிய மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் பொருட்கள், அவற்றில் இடம்பெறுகின்றன.
நேற்று நண்பகல் வரை, ரஷியப் நடமாடும் இராணுவ மருத்துவமனை, சி ச்சுவான் மாநிலத்தின் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், காயமுற்ற 47 பேருக்கு சிகிச்சை வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் அரசு, 22ம் நாள் சீனாவுக்கு 10 ஆயிரம் கூடாரங்களை மீண்டும் வழங்கத் தீர்மானித்தது. இது வரை, பாகிஸ்தான் தரப்பு உதவியாக வழங்கிய கூடாரங்களின் எண்ணிக்கை, 22 ஆயிரத்து 260ஐ எட்டியுள்ளது.
|