• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-23 15:09:12    
சர்வதேசச் சமூகம் வழங்கிய மீட்புதவி

cri
கடந்த சில நாட்களில், இத்தாலி, கியூபா, அமெரிக்கச் சர்வதேச வளர்ச்சி அலுவலகம், துர்க்மேனிஸ்தான், ரஷியா, பாகிஸ்தான் முதலியவை, வென் ச்சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் பல்வேறு பிரதேசங்களுக்குத் தொடர்ந்து மீட்புதவிப் பொருட்கள் மற்றும் சிகிச்சை உதவிகளை வழங்கி வருகின்றன.

இத்தாலி அரசு வழங்கிய மூன்றாம் தொகுதி உதவிப் பொருட்கள், இன்று விடியற்காலையில், சங் து நகரின் ஷுவாங் லியு விமான நிலையத்தைச் சென்றடைந்தன. இது வரை, இத்தாலி அரசு, சீனாவுக்கு வழங்கிய 33 இலட்சம் யூரோ மதிப்பான நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவித்தொகை, முழுமையாக சி ச்சுவான் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சென்றடைந்துள்ளன.

35 பேர் கொண்ட கியூபாவின் சர்வதேச மருத்துவச் சிகிச்சை மீட்புதவிக் குழு, இன்று முற்பகல், பெய்ஜிங்கின் தலைநகர் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இன்று பிற்பகல், சங் து நகருக்குச் சென்று, வென் ச்சுவான் நிலநடுக்கத்தால் காயமுற்றவருக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கியுள்ளன.

அமெரிக்கச் சர்வதேச வளர்ச்சி அலுவலகம், பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்களுக்கு வழங்கிய 8 இலட்சத்து 15 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பிலான மீட்புதவிப் பொருட்கள், 22ம் நாள் முற்பகல் சி ச்சுவான் மாநிலத்தின் சங் து நகர் சென்றடைந்தன.

துர்க்மேனிஸ்தான், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவியாக வழங்கிய பொருட்கள் நேற்றிரவு, சீன கான் சூ மாநிலத்தின் லான் ச்சோ நகரின் ச்சோங் ச்சுவான் விமான நிலையத்தை சென்றடைந்தன. ஆடைகள், போர்வைகள், தலையணைகள், மருந்துப் பொருட்கள், மருத்துவச் சிகிச்சை உபகரணங்கள் முதலிய மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் பொருட்கள், அவற்றில் இடம்பெறுகின்றன.

22ம் நாள் நண்பகல் வரை, ரஷியாவின் நடமாடும் இராணுவ மருத்துவமனை, சி ச்சுவான் மாநிலத்தின் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், காயமுற்ற 47 பேருக்கு சிகிச்சை வழங்கியுள்ளது.