• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-23 09:18:29    
வென்சுவான் நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி

cri

கடந்த சில நாட்களில், சில வெளிநாட்டுத் தலைவர்களும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும், வெளிநாடுகளிலுள்ள சீன தூதரங்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்கான சீனப் பிரதிநிதி அலுவலகங்களுக்குச் சென்று, சிச்சுவான் வென்சுவான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர்.


யூனிஸ்கோவிலுள்ள சீன நிரந்தர பிரதிநிதிக் குழு 19ம் நாள் முதல் 21ம் நாள் வரை, அதன் இல்லத்தில் இறந்தோருக்கு அஞ்சலி அறையை நிறுவியது. யூனிஸ்கோவின் பொறுப்பாளர்களும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் அங்கு சென்று நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தனர். 21ம் நாள், நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடந்த பல நடவடிக்கைகளில் பங்கெடுத்த பணியாளர் அனைவரும், நடவடிக்கை துவங்கும் முன் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.


21ம் நாள், பிரேசில் துணை அரசுத் தலைவர் jose alencar gomes da silva, பிரதிநிதி அவையின் தலைவர் arlindo chinaglia, லைபீரிய அரசுத் தலைவர் ellen Johnson sirleaf அம்மையார் மற்றும் அமைச்சர்கள், ஹங்கேரி தலைமையமைச்சர் gyurcsany ferenc, செக் தலைமையமைச்சர் mirek topolanek, தென் கொரிய அரசுத் தலைவர் lee myong bak ஆகியோர் வெளிநாடுகளிலுள்ள சீன தூதரகங்களுக்குச் சென்று நிலநடுக்கத்தால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர்.