• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-23 09:54:55    
நிவாரணப் பொருட்களின் கண்காணிப்பு

cri

நிலநடுக்கத்தின் இழப்பை குறைக்க பல்வேறு பணிகளை பயன் தரும் முறையில் மேற்கொளும் வகையில், நிவாரணப் பொருட்களின் கண்காணிப்பை தொடர்புடைய எல்லா நிதி துறைகளும் வலுப்படுத்த வேண்டும் என்று சீன நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அவசர அறிக்கை ஒன்று தெரிவித்தது.


பல்வேறு நிதி துறைகள் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையை உத்தரவாதம் செய்து, உற்பத்தியை மீட்டெடுத்து, தாயகத்தை வெகுவிரைவில் புனரமைக்க வேண்டும். நிதியை உரிய முறையில் விநியோகித்து பயன்படுத்த வேண்டும் என்று நிதி அமைச்சகம் கோரிக்கை விடுத்தது.


தணிக்கை மூலம், நிதியின் சிறப்பு ஒதுக்கீடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிவாரணப் பொருட்கள், உதவி நிதி ஆகியவை வழங்கப்பட்டதை தணிக்கை செய்வதன் மூலம் அறிந்துகொள்ள வேண்டும். அண்மையில், சீன தணிக்கை அமைச்சகத்தின் தலைவர் liujiayi சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலைமையை கள ஆய்வு செய்த போது இவ்வாறு தெரிவித்தார்.


சீன பொது துறை அமைச்சகத்தின் அறிக்கைபடி, 22ம் நாள் நண்பகல் 12 மணி வரை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடை தொகை 2 ஆயிரத்து 141 கோடியே 60 இலட்சம் யுவானை எட்டியது.