சமூகத்தினர் அனைவரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கும் விதமாக, 22ம் நாள் முதல், அதன் இணைய தளத்தில் நிதி நன்கொடை பற்றிய விபரமான பட்டியலை வெளியிடச் சீனப் பொது துறை அமைச்சகம் தீர்மானித்தது. மே திங்கள் 12ம் நாள், சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் கடுமையான நிலநடுக்கம் நிகழ்ந்த பின், சமூகத்தின் பல்வேறு துறையினர் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவித்தொகையும் பொருட்களையும் வழங்கியுள்ளனர். மே திங்கள் 22ம் நாள் மதியம் 12:00 மணிக்கு வரை, சீனப் பொது துறை அமைச்சகம், 50 ஆயிரத்து 239 முறையடன் 138 கோடி யுவான் மதிப்பிலான உதவித் தொகை பெற்றுள்ளது. இப்போது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவசர வாழ்க்கை மீட்பு மற்றும் பிரதேசங்களின் புனரமைப்புக்கான நன்கொடைப் பணி, இன்னும், விரைவாகவும் ஒழுங்காகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சீனப் பொது துறை அமைச்சகத்தின் அறிக்கைக்கு இணங்க, மே திங்கள் 22ம் நாள் முற்பகல் 10 மணிவரை, சி ச்சுவான் வென் சுவான் நிலநடுக்கத்தில், 51 ஆயிரத்து 151 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு இலட்சத்து 88 ஆயிரத்து 431 பேர் காயமடைந்துள்ளனர். 29 ஆயிரத்து 328 பேரை காணவில்லை. மே திங்கள் 22ம் நாள் மதியம் 12:00 மணி்க்கு வரை, உள் நாட்டு வெளிநாட்டு உதவித்தொகை மொத்த 2,141 கோடியே 60 இலட்சம் யுவான் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
|