தஜீக் இனம், ஐரோப்பிய மக்களின் சிறப்பைக் கொண்டிருந்த போதிலும், பழங்காலம் முதல், அவர்கள் சீனாவிலே வாழ்கின்றனர். தற்போது, 60 விழுக்காட்டு தஜீக் இன மக்கள், சிங்கியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் tashikuergan-tajike தன்னாட்சி மாவட்டத்தில் வாழ்கின்றனர். 1954ம் ஆண்டு தஜீக் தன்னாட்சி மாவட்டம் நிறுவப்பட்டது. இவ்வினத்தின் மொத்த மக்கள் தொகை, 30 ஆயிரத்துக்கு மேலாகும்.

தஜீக் இன மக்களில் பெரும்பாலானோர், தஜீக் மொழியின் selekuer வட்டார மொழியைப் பேசுகின்றனர். இது, இந்திய-ஐரோப்பிய மொழி குடும்பத்தின் பாரசீக மொழி கிளையைச் சேர்ந்தது. அவர்களுக்கு சொந்த எழுத்துக்கள் இல்லை. பொதுவாக, உய்கூர் மொழியின் எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர். தஜீக் இன மக்கள், இஸ்லாம் மத நம்பிக்கை கொண்டவர்கள். இவர்கள் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள்.

கால்நடை வளர்ப்பு, தஜீக் இன மக்களின் முக்கிய தொழிலாகும். வேளாண்மையை, துணை தொழிலாக செய்கின்றனர். வேளாண்மை செய்கிறவர், கோதுமையால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வழக்கமாக சாப்பிடுகின்றனர். ஆயர்கள் முக்கியமாக இறைச்சிகளைச் சாப்பிடுகின்றனர். தஜீக் இன மக்கள், காய்கறிகளை மிகக் குறைவாகவே சாப்பிடுகின்றனர். பால் தேநீரை அருந்துவது அவர்களது வழக்கமாகவுள்ளது.

வசந்த விழா, விதைப்பு விழா, முதலியவை, தஜீக் இனத்தின் முக்கிய விழாக்களாகும். அவர்களின் பல பாரம்பரிய விழாக்கள், உள்ளூர் உய்கூர், கேர்கச்சி முதலிய இஸ்லாமிய மத நம்பிக்கை கொண்ட மக்களின் விழாக்களைப் போலவே இருக்கின்றன. விழாவின் போது, ஒவ்வொரு குடும்பத்திலும் ஆடு மாடுகளை கொன்று, பல்வகை வறுக்கப்பட்ட உணவுகளைச் சமைக்கின்றனர். சாப்பிடும் போது, ஆண்களும் பெண்களுமாக பிரிந்து சாப்பிடுகின்றனர்.
மதத் தலைவர் தலைமை தாங்கி திருமறை ஓதி, திருமண விழா நடைபெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
|