• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-23 09:54:12    
திபெத்தில் ஏற்பட்ட மாற்றங்களை

cri

இன்றைய சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில், மக்கள், நாட்டின் உரிமையாளர்களாக இருக்கின்றனர். மிகப் பெரும்பாலான குடும்பங்களுக்கு நிலையான வீடுகள் உண்டு. அனைத்து விவசாயிகளும் ஆயர்களும், இலவச மருத்துவ சிகிச்சையை அடிப்படையாகக் கொண்ட வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்புப் பிரதேசத்தின் கூட்டுறவு மருத்துவ சிகிச்சை முறைமையில் கலந்து கொண்டுள்ளனர். 9 ஆண்டுகால கட்டாயக் கல்வியில் சேரும் மாணவர் எண்ணிக்கை 90 விழுக்காட்டை எட்டியுள்ளது. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பு, 95 விழுக்காட்டு திபெத் மக்கள், துயரமான பண்ணை அடிமை வாழ்க்கையை நடத்தினர். இன்றைய நிகழ்ச்சியில், வரலாற்று சக்கரத்தின் திபெத் மக்களின் துயரமான வரலாற்றை நாம் பார்க்கின்றோம்.

பண்டைக்கால திபெத்தில், பண்ணை அடிமைகள் நாணயமாகப் பரிவர்த்தனை செய்யப்பட்டனர். சீனத் திபெத்தியல் ஆய்வு மையத்தின் துணை பொது இயக்குநர் gelek கூறியதாவது

என் தாய் வழி பாட்டி, பண்ணை அடிமைச் சொந்தகாரர் வீட்டில் பண்ணை அடிமையானார். நான் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தேன். காலையில், நான் பிறந்தேன். பிற்பகலில், என் அம்மா, உழைக்க வேண்டியிருந்தது. பண்ணை அடிமையான அம்மா, இப்படித்தான் செய்ய வேண்டியிருந்தது என்றார் அவர். லாசா நகரில் வாழும் ci zhuoma அம்மையாருக்கு இவ்வாண்டு வயது சுமார் 70. அவரும் பண்டைக்காலத்தில் ஒரு பண்ணை அடிமை தான், அவர் கூறியதாவது

பண்ணை அடிமைச் சொந்தகாரர்கள், கிழக்குத் திசையை நோக்கி செல்ல வேண்டும் என்று சொன்ன போது நாங்கள் கிழக்குத் திசையை நோக்கி செல்ல வேண்டும். அவர்கள் மேற்குத் திசையை நோக்கி செல்ல வேண்டும் என்று சொன்ன போது, நாங்கள் மேற்குத் திசையை நோக்கிச் செல்ல வேண்டும். எங்களுக்குப் பேச்சு உரிமையில்லை. பண்ணை அடிமைச் சொந்தகாரர்கள் செல்வம் மிக்கவர்கள். ஆனால், எங்கள் வாழ்க்கை, மிகவும் வறுமையாக இருந்தது என்றார் அவர்.

Se xin கிராமப்புறம், லாசா நகரிலிந்து 70க்கு மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சூரிய ஒளியில், குழந்தைகள், தம் விருப்பப்படி விளையாடுகின்றனர். ஆனால், பலபத்து ஆண்டுகளுக்கு முன்பு, இது, தலாய்லாமாகுடும்பத்தின் பண்ணையாக இருந்தது. பண்மை அடிமைகள் நிலப்பிரபுக்களின் அடிமை முறையைச் சகித்துக்கொள்ள முடியாமல், ஒரு பகுதி பண்மை அடிமைகள் கூட்டாகத் தப்பி ஓடினர். அப்போது, இளைஞரான chosphelவும் அவரது அக்காளும் இந்த நடவடிக்கையில் கலந்து கொண்டனர். இப்போது, இங்கு குழந்தைகள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார்கள். ஆனால், அப்போது பண்ணை அடிமைகளின் குழந்தைப்பருவம் துயர் மிகுந்தாகவும் பயங்கரமானதாகவும் இருந்தது என்று முதியோராகிய chosphel கூறினார். அவர் மேலும் கூறியதாவது

முன்பு, இரவில் அதிகப்படியாக உழைக்குமாறு தலாய்லாமா குடும்பங்கள், Se xin மக்களை நிர்ப்பந்தித்தன. நள்ளிரவில், நாங்கள் சிறிது நேரம் உறங்கலாம். இதைத் தவிர, பண்ணை அடிமைச் சொந்தகாரர்கள், எங்கள் உழைப்பைக் கண்காணித்தனர். எனவே, நாங்கள் அனைவரும் மிகுந்த களைப்படைந்தோம். நாங்கள் தரையில் அடிக்கடி சாப்பிடாமல் படுத்து உறங்கினோம். என்றார் அவர்.

பண்டைக்காலத்து திபெத்தில், பண்ணை அடிமைகளின் மொத்த எண்ணிக்கை, அப்போதைய திபெத்தின் மொத்த மக்கள் தொகையில் 95 விழுக்காட்டுக்கு மேல் வகித்தது. எண்ணிக்கையில் குறைவான சில அதிகாரிகள், உயர் குடி மக்கள் உயர் நிலைத்துறவிகள் ஆகிய மூன்று பண்ணை அடிமைச் சொந்தகாரர்கள், அனைத்து பண்ணை அடிமைகளையும் கட்டுப்படுத்தியிருந்தனர்.

பண்ணை அடிமைச் சொந்தகாரர்கள், திபெத் மக்கள் தொகையில் 5 விழுக்காட்டுக்குக் குறைவாக இருந்தனர். ஆனால், திபெத்தின் எல்லா விளை நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், காடுகள், மலைகள் மற்றும் பெரும்பாலான விலங்குகள் ஆகியவற்றையும் அவர்கள் உரிமை கொண்டாடினர். 17ஆம் நூற்றாண்டு qing வம்சக்காலத்தின் துவக்க ஆண்டின் புள்ளிவிபரங்களின் படி, அப்போது, திபெத் 2இலட்சத்துக்கு மேற்பட்ட ஹெக்டர் விளை நிலம் கொண்டடது. அதிகாரிகள், துறவிகள், உயர் குடி மக்கள் முதலிய மூன்று பண்ணை அடிமைச் சொந்தக்காரர்கள், 100 விழுக்காட்டு விளை நிலங்களைக் கட்டுப்படுத்தியிருந்தனர். சீனத் திபெத் ஆய்வு மையத்தின் திபெத்தியல் நிபுணர் zhou yuan கூறியதாவது

உயர் நிலை துறவிகள், உயர் குடி மக்கள் ஆகியோர், பரந்துபட்ட பண்ணை அடிமைகளின் மீது கூட்டாகக் சர்வாதிகாரம் செலுத்துவது என்பது அரசியலும் மதமும் ஒன்றிணை நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமையும் அமைப்பு முறையின் சாராம்சமாகும். திபெத்தின் உற்பத்தி சாதனத்தின் உயர்ந்த ஏகபோகத்தைச் சார்ந்த அவர்கள், பரந்துபட்ட பண்ணை அடிமைகளை உரிமை கொண்டாடி அவர்களைச், சுரண்டி அடக்கி ஒடுக்கினர். அதனால் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை அமைப்பு முறையின் உற்பத்தி உறவின் அடிப்படை உருவாகியது.

1965ம் ஆண்டு, திபெத் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட பிறகு, திபெத் மக்கள், தேர்தல் மற்றும் தேர்தெடுக்கப்படும் உரிமைகளை அனுபவிக்கின்றனர். திபெத் இனம் மற்றும் பிற சிறுபான்மை தேசிய இனங்களின் ஊழியர்கள், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் முக்கிய ஊழியர்களாகியுள்ளனர். புள்ளிவிபரங்களின் படி, 2006ம் ஆண்டின் இறுதி வரை, திபெத் இனம் மற்றும் பிற சிறுபான்மை தேசிய இன ஊழியர்களின் எண்ணிக்கை, 60 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இப் பிரதேசத்தில் இது ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் 70 விழுக்காட்டை வகித்தது.