• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-23 09:44:17    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான கருத்துகள்

cri
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம், ஆகஸ்டு திங்களில் பெய்சிங்கில் நடைபெறும் 2008ம் ஆண்டு கோடைகால ஒலிமிப்க் விளையாட்டு போட்டியை பாதிக்கவில்லை. சீனாவிலுள்ள டென்மார்க் தூதர் Mikkelsen சீன வானொலி நிலையத்தின் செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு தெரிவித்தார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பின், பேரிடர் நீக்க பணிகளில் டென்மார்க் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றது. சீன அரசின் உயர்வேக எதிரொலியை Mikkelsen வெகுவாக பாராட்டினார். அவர் கூறியதாவது:
பேரிடர் நீக்க பணிகள் பயன்தரும் முறையில் நடைபெற்றன. அடிப்படை வசதிகள் நொறுக்கப்படுவதாலும், வாநிலை காரணிகளாலும், இம்மீட்புஉதவி நடவடிக்கை இக்கட்டான நிலையை எதிர்நோக்கியது என்றார் அவர்.
செய்தி ஊடகங்கள் பேரிடர் நீக்க பணிகளை ஆழமான முறையில் அறிவிப்பதால், சீன

அரசு நெருக்கடியை கையாண்ட ஆற்றலுக்கான நம்பிக்கையை வெளியுலகு அதிகரித்துள்ளது. அத்துடன், சீனாவுக்கான நம்பிக்கையையும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் மனப்பாங்கையும் இத்தீமை பாதிக்கவில்லை என்று அவர் கருதுகின்றார். அவர் கூறியதாவது:
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதை இந்நிலநடுக்கம் பாதிக்கவில்லை. நாங்கள் ஒரு கடும் நிலநடுக்கத்தை அனுபவித்தோம். ஆனால், ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை இது பாதிக்கவில்லை என்றார் அவர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பின், டென்மார்க் தலைமை அமைச்சர் சீனாவுக்கு ஆறுதல் செய்தியை உடனடியாக விடுத்ததினார். சீனாவிலுள்ள தூதரகம் மூலம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு கூடாரம், கம்பளம் முதலிய நிவாரணப் பொருட்களை வழங்க டென்மார்க் முன்னேற்பாடு செய்துள்ளது. அத்துடன், இப்பிரதேசங்களுக்கு உதவித்தொகையை வழங்க டென்மார்க் வர்த்தக சங்கம் முடிவு செய்துள்ளது என்று அறியப்படுகின்றது.