• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-23 09:50:53    
பெண் காவற்துறையினர் இருவரின் அருஞ்செயல்

cri
சி சுவான் மாநிலத்தின் போங் சோ நகரில், ஜியாங் மின் என்ற சாதாரண பெண் இருக்கிறார். காவற்துறையில் பணிபுரியும் இவர் QIANG இனக் குடும்பத்தில் பிறந்தவராவார். வென் சுவான் மாவட்டத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் அவரது பெற்றோரும் 2 வயதான மகளும் உயிரிழந்தனர். மாபெரும் துன்பத்தைச் சகித்துக் கொண்ட அவர், பேரிடர் நீக்கப் பணியின் முன்னணியில் உறுதியாக ஈடுபட்டு வருகிறார்.

"என் மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் 4 பேர், அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். கட்டிடம் இடிந்து விழுந்தது. இப்போது எதுவும் இல்லை" என்றார் ஜியாங் மின் அம்மையார்.
போங் சோ நகரிலுள்ள தியான் போங் இடைநிலை பள்ளிக்கு தற்போது ஜியாங் மின் பொறுப்பேற்றுள்ளார். நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டு வீடுவாசலின்றி அல்லல்படுகின்ற 1400க்கு மேற்பட்ட பேர் அங்கே குடியமர்த்தப்பட்டனர். 18ஆம் நாள் விடியற்காலையில், பாதிக்கப்பட்ட மற்றொரு குடும்பம் அங்கே சென்றடைந்தது. ஜியாங் மின் அம்மையார் உடனே அவர்களுக்காக கூடாரம் அமைத்துக் கொடுத்தார். கூடாரம் அமைத்த பின்னர், நல்ல தூக்கத்தில் மூழ்கிய அக்குடும்பத்தின் குழந்தையை

ஜியாங் மின் அன்னையை போல் அரவணைத்து, படுக்கையில் கிடத்தினார். நீண்ட நேரம் குழந்தையின் முகத்தை அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.
19ஆம் நாள் வரை, பேரிடர் நீக்கப் பணியில் ஜியாங் மின் அம்மையார் 5 நாட்கள் போராடியுள்ளார். நிலநடுக்கம் நிகழ்ந்த போது, அவர் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அதற்குப் பின்னர் பேரிடர் நீக்கப் பணியில் அவர் உடனடியாக ஈடுபட்டார். ஆனால் சொந்த குடும்பத்தினர் பற்றிய தகவல் ஏதும் அவருக்கு கிடைக்கவில்லை.
"தொலைபேசி மூலம் அவர்களுடன் தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அப்போது, அவர்கள் உயிரோடு இருப்பார்கள் என்று நான் நம்பியிருந்தேன்" என்றார் ஜியாங் மின். நிலநடுக்கம் நிகழ்ந்த 2ஆம் நாள், தனது

குடும்பத்தினர் உயிரிழந்தனர் என்ற செய்தி அவருக்கு கிடைத்தது. ஆனால் அவர் ஆழ்ந்த துயரத்தைச் சகித்துக் கொண்டு, அமைதியாகவும் உறுதியாகவும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இறுதியில் அவர் பணித்தளத்தில் மயக்கமடைந்து விழுந்தார்.
தாயை இழந்த மகளாகவும் மகளை இழந்த தாயாகவும் ஜியாங் மின் அம்மையார் மாறினார். ஆனால், இவ்விரு துயரமான நிலையை அவர் புறந்தள்ளி, சொந்த குடும்பத்தினர் மீதான பாசத்தையும் நினைவையும் பாதிக்கப்பட்ட மற்றவர் மீது திசை திரும்பினார். அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து உதவியளிக்கும் அதே வேளையில், ஜியாங் மின் அம்மையார், அவர்கள் அன்பை உணரச் செய்கிறார். பாதிக்கப்பட்ட மக்கள் ஆறுதலை உணரச் செய்யும் வகையில் தன்னால் இயன்றதனைத்தையும் செய்வதாக அவர் கூறினார்.

கடும் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட சி ச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில், ஜியாங் மின் அம்மையாரைப் போன்ற சாதாரண, மாபெரும் பெண் காவற்துறையினர் அதிகமாக காணப்படுகின்றனர். சி ச்சுவான் மாநிலத்தின் ஜியாங் யூ நகரைச் சேர்ந்த ஜியாங் சியௌ ஜுவான் அம்மையார் அவர்களில் ஒருவராவார். பாலூட்டும் காலத்தில் இருக்கின்ற இளம் தாயான அவர், தனது ஆறு திங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தையை தனது பெற்றோரிடம் ஒப்படைத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் உயிர் தப்பிப் பிழைத்த குழந்தைகளின் தாயாக, அவர்களைப் பராமரித்து வருகிறார்.
நிலநடுக்கம் நிகழ்ந்த பின், பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து வந்த 10 ஆயிரத்துக்கு அதிகமான மக்களை ஜியாங் யூ நகரம் ஏற்றுக் கொண்டது. நகரத்துக்குள் நுழையும் மக்கள் தொகை அதிகரிப்தோடு, உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து வந்த, பசியில் வாடிய குழந்தைகளில், சிலர் தங்களது தாயை இழந்தனர். சில குழந்தைகளின் தாய்மார் காயமுற்றனர். அபாயகரமான

தருணத்தில், ஜியாங் சியௌ ஜுவான் அம்மையார் அக்குழந்தைகளின் அருகில் சென்றடைந்து, ஒரு தாயின் பொறுப்பை ஏற்றார்.
மே திங்கள் 14ஆம் நாளிலிருந்து, பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த 8 குழந்தைகளுக்கு ஜியாங் சியௌ ஜுவான் பாலூட்டியுள்ளார். தனது குழந்தையைக் கவனித்துக் கொள்வது போன்று அந்தச் சிறு குழந்தைகளை அவர் பாசமுடன் பராமரித்தார்.
தற்போது, ஜியாங் மின் மற்றும் ஜியாங் சியௌ ஜுவான் அம்மையார் பெருவாரியான காவற்துறையினருடன் சேர்ந்து பேரிடர் நீக்கப் பணியின் முன்னணியில் பாடுபட்டு வேலை செய்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களின் மீட்புதவியுடன் அமைதியான ஒழங்கான வாழ்க்கைக்குப் படிப்படியாக திரும்பி வருகின்றனர்.