நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள குழந்தைகளுக்கான உள நல உதவி திட்டத்தை யனிசெப் திட்டமிட்டுள்ளதாக இந்நிதியத்தின் ஹாங்காங் குழுவின் தலைமை இயக்குனநர் மேத்யு கூறினார்.
சீனாவின் சிச்சுவான் வென்சுவான் பிரதேசத்தில் கோடிக்கணக்கான குழந்தைகள் வாழ்கின்றனர். அவர்களில் பலரின் உடல் மற்றும் உள நலம் நிலநடுக்கத்தால் கடுமையாக புண்படுத்தப்பட்டுள்ளன. யனிசெப்வைச் சேர்ந்த பணியாளர்கள் சிலர் அங்கே மீட்புதவிப் பணியில் பங்கெடுத்து வருகின்றனர். நிபுணர்கள் அங்குள்ள குழந்தைகளின் உள நலத்தை மதிப்பீடு செய்வதோடு சீன பொது துறை அமைச்சத்துடன் ஒத்துழைத்து உள நல உதவித் திட்டங்களை துவக்க உள்ளனர் என்றார் அவர். இந்த திட்டம் ஜுன் திங்கள் நடுபாதியில் நடைமுறைப்படுத்தப்படும். 4 கோடி ஹாங்காங் டாலர் மதிப்புள்ள உதவித் தொகையால் இத்திடம் செயல்படுத்தப்படுகின்றது. அடுத்த நாட்களில் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் பெரிய ரக கூடாரக் குழந்தை மையத்தை நிறுவுவது இந்த உள நல உதவி திட்டத்தின் ஒரு நடவடிக்கையாகும். குழந்தைகள் இம்மையத்தில் விளையாடுவதன் மூலம் உள நலமுடைய செய்வது குறிக்கோளகளில் ஒன்றாகும். தற்காலிக பள்ளிகளை நிறுவி உள நல உதவி அளிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி செய்வது அதன் இன்னொரு குறிக்கோளாகும்.
|