• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-23 18:23:01    
வெளிநாட்டு செய்தி ஊடகங்களின் கருத்துக்கள்

cri
வெளிநாட்டுச் செய்தி ஊடகங்கள் அண்மையில் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு, சீன அரசின் உயர் பயன் தரும் பேரிடர் நீக்கப் பணியைப் பாராட்டின.
பேரிடர் நீக்கப் பணியில் சீனத் தலைவர்கள் தெளிவான கருத்துடன் வேகமாக செயல்பட்டு வருகின்றனர். இது மனித முதன்மை என்ற மதிப்பு கருத்தைக் காட்டுகின்றது. சிங்கப்பூர் Lianhe zaobao இன்று வெளியிட்ட கட்டுரையில் இதைச் சுட்டிக்காட்டியது.
முழு பேரிடர் நீக்கப் பணியிலும், சீன அரசின் பல்வேறு நிலை வாரியங்கள் எதிர்பாராத நிலைமையைச் சமாளிக்கும் ஆற்றலையும், மீட்புதவிப் பொருட்களை விரைவாக திரட்டி அனுப்பும் ஆற்றலையும், பணிக்கு ஏற்பாடு செய்யும் ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ளன. இது பல்வேறு நாடுகளின் மதிப்பை பெற்றுள்ளது என்று நியுசிலாந்து சீன Herald என்னும் செய்தி ஏடு கூறியது.
சீனாவில் நிலநடுக்கத்துக்குப் பின், நன்கொடை தொகை மிக விரைவாக அதிகரித்து வருகின்றது. பல பொது மக்கள் தங்களது சொந்த வாகனங்களுடன் அரசு மற்றும் இராணுவத்தின் மீட்புதவி பணியில் கலந்து கொண்டுள்ளனர் என்று அமெரிக்க AP செய்தி நிறுவனம் 19ம் நாள் வெளியிட்ட கட்டுரையில் கூறியது.