சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் நேற்று சீனாவின் Zhe Jiang மாநிலத்துக்குச் சென்று, பேரிடர் நீக்கப் பணியில் பயன்படுத்தப்படும் கூடாரங்களின் உற்பத்தி நிலைமையை கண்டறிய சோதனைப் பயணம் மேற்கெண்டார். உள்ளூரில் நடைபெற்ற கூடார உற்பத்தி தொழில் நிறுவனங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில், இத்தொழில் நிறுவனங்கள் தங்களால் இயன்ற அளவில் பேரிடர் நீக்கத்துக்கு பயன்படுத்தப்படும் கூடாரங்களை உற்பத்தி செய்வது பற்றிய கடினமான கடமையை செவ்வனே செய்ய வேண்டும் என்று ஹு சிந்தாவ் வலியுறுத்தினார்.
கூடார உற்பத்தி தொழில் நிறுவனத்தில் ஹு சிந்தாவ்
ஒரே திங்களுக்குள், 9லட்சம் கூடாரங்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களு்ககு வழங்கப்பட்ட வேண்டும் என்று சீன அரசு கோரியுள்ளது. கூடார உற்பத்தி தொழில் நிறுவனங்கள் பல இருப்பதால், பேரிடர் நீக்கத்துக்கு பயன்படுத்தப்படும் கூடாரத்தை உற்பத்தி செய்வது பற்றிய கடினமான கடமையை Zhe Jiang மாநிலத்திலான இத்தொழில் நிறுவனங்கள் பொறுப்பேற்கின்றன.
|