• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-23 18:39:33    
ஜெர்மனி வழங்கிய நடமாடும் மருத்துவ மனை

cri
ஜெர்மன் செஞ் சிலுவைச் சங்கம் வழங்கிய நடமாடும் மருத்துவ மனை ஒன்றும் தொடர்புடைய நிவாரணப் பொருட்களும் நேற்று தலைநகரான பெர்லினிலிருந்து சிச்சுவான் மாநிலத்தின் தலைநகரான செங்துவை சென்றடைந்தன. இது, ஜெர்மனி சீனாவின் நிலநடுக்கப் பிரதேசங்களுக்கு முதன்முறையாக வழங்கிய நிவாரண உதவியாகும்.

பெர்லினின் விமான நிலையத்தில் போயிங் 747 ரக பெரிய போக்குவரத்து விமானம் ஒன்றில், விமான நிலையத்தைச் சேர்ந்த பணியாளர்கள் விரைவாக நிவாரணப் பொருட்களை ஏற்றினர். இப்பொருட்களில், ஜென்மன் செஞ் சிலுவைச் சங்கம் வழங்கிய நடமாடும் மருத்துவ மனை, மருந்துகள், சிகிச்சைக் கருவிகள், வாகனங்கள் முதலியவை இடம்பெற்றன. பெய்சிங் நேரப் படி, இன்று காலை 9மணிக்கு, இந்நடமாடும் மருத்துவ மனை செங்து நகரைச் சென்றடைந்தது. இதற்கு பிறகு, இது உடனடியாக துச்சியாங்யான் நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. பெர்லின்-செங்து விமான பயண வரலாற்றில் இதுவே முதன்முறையான நேரடி பறத்தலாகும். ஜென்மன் செஞ் சிலுவைச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பிரெட்ரிக் பார்கென்ஹாமர் கூறியதாவது

துச்சியாங்யான் நகரில் உள்ள மருத்துவ மனைகள் நிலநடுக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டதால், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஆற்றல் இல்லை. மேலும், பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களிலிருந்து வந்த மக்களுக்கு, வீடுகளும் மருத்துவச் சிகிக்கையும் அதிகமாக தேவைப்படுகின்றன. இத்தகைய நடமாடும் மருத்துவ மனை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மிக வசதியான மருத்துவ மனையாக மற்றும் என்று அவர் குறிப்பிட்டார்.

30 மற்றும் 50 சதுர மீட்டர் நிலப்பரப்பைக் கொண்ட 25 கூடாரங்கள் இம்மருத்துவ மனையை உருவாக்குகிறது. 120 நோயாளர் படுக்கைகள், அறுவை சிகிச்சையறை,அவசர நிலை சிகிச்சையறை, ஊடுகதிர் அறை, மருத்துவ அறை முதலியவை இந்நடமாடும் மருத்துவ மனையில் உள்ளன. சுமார் 2.5இலட்சம் மக்கள் தொகையை கொண்ட பிரதேசங்களுக்கு இது மருத்துவச் சிகிக்கை அளிக்க முடியும். நீர்,மின்னாற்றல், உணவுப் பொருட்களின் விநியோகம் வசதிகளைக் கண்ட இம்மருத்துவ மனை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வெளிப்புற ஆதரவின்றி செயல்பட்டு வருகிறது. ஜெர்மன் செஞ் சிலுவைச் சங்கத்தின் பேரிடர் நிர்வாக பிரிவின் தலைவர் சிறிஸ்டாஃப் ஜோனேன் விளக்கிக் கூறியதாவது

ஜெர்மனி வழங்கிய நடமாடும் மருத்துவ மனை

மொத்தம் 11 ஜெர்மன் பணியாளர்கள் அடங்கும் குழு இந்நடமாடும் மருத்துவ மனையுடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பப்படும். மருத்துவர், செவிலியர், நிர்வாகப்பணியாளர் உள்ளிட்ட 5 மருத்துவபணியாளர்கள் உள்ளனர். அவர்கள் சீனத் தரப்புக்கு பல்வகை வசதிகளின் பயன்பாட்டுச் சேவையை வழங்குவர். தவிர, மருத்துவ மனையின் கட்டுமானம், நீர் மற்றும் மின்னாற்றலின் விநியோகம், மருத்தவ கருவிகளின் தொழில் நுட்ப உத்தரவாதம் மற்றும் செப்பனிடுதல் ஆகிய சேவையை, தொழில் நுட்ப வல்லுனர்கள் வழங்குவர் என்று ஜோனேன் கூறினார்.

சிச்சுவான் நிலநடுக்கப் பிரதேசங்களுக்கான உதவி நடவடிக்கைக்கு, ஜெர்மன் வெளியுறவு அமைச்சு அதிகம் ஆதரவு வழங்கியுள்ளது. மொத்தம் 40இலட்சம் யூரோ மதிப்புள்ள 50டன் நிவாரணப் பொருட்கள் இந்த ஆதரவில் அடக்கம். நடமாடும் மருத்துவ மனை துச்சியாங்யான் நகருக்குச் சென்ற பிறகு, 72மணிக்குள் இது கட்டியமைக்கப்பட்டு, பயன்படுத்தப்படலாம் என்று நிபுணர் ஒருவர் மதிப்பிட்டார்.

ஜெர்மன் நிபுணர் குழுவின் முதல் தொகுதிப் பணியாளராக, குழந்தை மருத்துவர் ஜோகிம் கார்தெமன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்றார். வெளிநாட்டில் மருத்துவச் சிகிச்சைக் கடமையில், அவர் 7வதுமுறையாக பங்கேற்கிறார். இம்மருத்தவ மனை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக உதவி அளிப்பதாக தெரிவித்தார். அவர் கூறியதாவது

துச்சியாங்யான் சென்றடைந்ததும், அடிப்படை நோய் சிகிச்சையை அளிப்போம். சீனாவின் சகப்பணியாளர்கள் மருத்துவ மனை மற்றும் மருத்துவ சிகிச்சைப்பணிகளை வேகமாக மேற்கொள்ள உதவுவது என்பது, எமது முக்கிய கடமையாகும் என்று அவர் தெரிவித்தார்.

உதவி நடவடிக்கையில் பங்கெடுத்த ஜெர்மன் தொழில் நுட்ப நிபுணர் கிளாஸ் முச்செவ், சீனப் பணியார்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இம்மருத்துவ மனையை விரைவில் கட்டிமுடிக்கவும் பாடுபடவுள்ளதாக தெரிவித்தார்.

ஜெர்மன் நிபுணர்கள் நாடு திரும்பிய பிறகு, இம்மருத்துவ மனை சீன செஞ்சிலுவை சங்கத்துக்கு இலவசமாக வழங்கப்பட்டு, எதிர்கால பேரிடர் நீக்கப் பணிக்கு பயன்படுத்தப்படும்.