நிலநடுக்கப் பிரதேசங்களுக்கு பாகிஸ்தான் அரசு வழங்கிய 22ஆயிரத்து260 கூடாரங்கள் உள்ளடங்கிய உதவிப் பொருட்களை, சீனா ஏற்றுக்கொள்வதாக, சீனத் துணை வெளியுறவு அமைச்சர் வாங் யீ இன்று பெய்சிங்கில் கூறினார்.
சீன மக்களுக்கு தம்மா இயன்ற உதவியை வழங்க, பாகிஸ்தான் அரசும் மக்களும் விரும்புவதாக, சீனாவிலுள்ள பாகிஸ்தானின் தற்காலிக தூதர் அப்துல் சாலிக் கான் கூறினார்.
பாகிஸ்தான் அரசு மற்றும் மக்களின் உதவிக்கு, வாங் யீ உளமார்ந்த நன்றிகளை தெரிவித்தார். அண்மையில் சீன வெளியுறவு அமைச்சகம் உலகளவில் கூடாரங்களைத் திரட்டத் தொடங்கியது. இதன் விளைவாக, ஒரு வார காலத்தில், வெளிநாட்டிலுள்ள சீனத் தூதரகங்கள் சுமார் ஒரு இலட்சத்து 80ஆயிரம் கூடாரங்களை ஏற்றுக்கொண்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
|