சீனத் தலைமை அமைச்சரும் அரசவையின் பேரிடர் நீக்க மீட்புதவிப் பணி தலைமையகத்தின் தலைவருமான வென் ச்சியா பாவ், இன்று சி ச்சுவன் மியன் யான் நகரிலான, பேரிடர் நீக்க மீட்புதவிப் பணிக்கு தொடர்ந்து தலைமை தாங்குகிறார்.
இன்று முற்பகல், வென் ச்சியா பாவ், மியன் யான் நகரிலுள்ள மருத்துவ மனைகளுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ சிகிச்சை நிலைமையையும், பேய் ச்சுவன் இடை நிலை பள்ளியில், மாணவர்களின் படிப்பு நிலைமையையும் பார்வையிட்டார்.
பேரழிவிற்கு பின், கடுமையான தொற்று நோய் இல்லை என்பதை உத்தரவாதம் செய்யும் வகையில், 4500 தொழில் நுட்ப வல்லுனரை சுகாதார அமைச்சகம் அனுப்பியுள்ளது. அவர்கள், சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்வர். என்று அவர் மியன் யான் நகரில் தெரிவித்தார்.
|