• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-23 14:34:55    
பாதிக்கப்பட்ட பிரதேச சந்தை வினியோகத்திற்கான உத்தரவாதம்

cri

மே 12ம் நாள், சீனாவின் சி ச்சுவன் வென் ச்சுவன் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் உற்பத்தி மற்றும் வாழ்க்கையின் அத்தியாவசிய பொருட்கள், பேரிடர் நீக்கப் பணியின் பொருட்கள் ஆகியவற்றின் வினியோகத்தை உத்தரவாதம் செய்யும் வகையில், சீன வணிகத் துறை அமைச்சகம், முன்னெச்சரிக்கை திட்டத்தை துவக்கி, அப்பிரதேச சந்தைக்கான பொருட்கள் வினியோகத்தை முழுமையாக உத்தரவாதம் செய்து வருகிறது. பொருட்களுக்கான போக்குவரத்து அளவை வலுப்படுத்தியுள்ளதன் மூலம், தற்போது, இப்பிரதேசத்தின் பொருள் வினியோகம் மற்றும் அதன் விலை நிதானப்படுத்தப்பட்டுள்ளது.

சீன அரசவை செய்தி பணியகம் நேற்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சீன வணிக துறை அமைச்சர் சேன் தே மிங் தற்போது, வணிக துறை அமைச்சகம், இரு செயல்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். அவர் கூறியதாவது—

முதலாவது, சி ச்சுவன் சந்தைக்குத் தேவையான பொருட்கள் வினியோகத்தை உத்தரவாதம் செய்யும் வகையில், நாடு முழுவதிலிருந்து பொருட்களை திரட்ட வேண்டும். இரண்டாவது, சந்தைகளின் இயல்பான ஒழுங்கை வெகுவிரைவில், மீட்க வேண்டும். 22ம் நாள் முற்பகல், மிக கடுமையாக பாதிக்கப்பட்ட சி ச்சுவன், கன் சூ, ச்சுங் சின் ஆகிய 3 மாநிலங்களில் 17 ஆயிரம் சந்தைகள், மீட்கப்பட்டுள்ளன. இத்திங்களிறுதிக்குள், மாவட்ட நிலைக்கு மேலான சந்தைகள் மீட்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

செந்து உள்ளிட்ட பெரிய நகர சந்தைகளுக்கான பொருட்கள் வினியோகம் அதிகமாகும். பாதிக்கப்பட்ட நகரங்களுக்கும் மாவட்டங்களுக்கும் செல்லும் போக்குவரத்து நெறிகள், இயங்குமளவை சீராகபட்டுள்ளன. எனவே மிகவும் பற்றாக்குறையாக உள்ள பொருட்களை, மிகுந்த சிரமங்களோடு உள்ள மக்களுக்கு கொண்டுச்செல்லும் வழிமுறைகள் உருவாக்குவது, தற்போதைய மிக முக்கிய பணியாகும் என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது

வணிக தொழில் நிறுவனங்கள், பல்வேறு ஆற்றல்களை திரட்டி, பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டுச்செல்ல வேண்டும். அனைத்துவித மோட்டார் வாகனங்களையும் பயன்படுத்த வேண்டும். அவை போதா விட்டால், குதிரைகளைப் பயன்படுத்த வேண்டும். குதிரைகளும் போதா விட்டால், மக்களே பொருட்களை சுமந்து கொண்டு இன்னலுக்குள்ளாக்கப்பட்ட மக்களுக்கு அனுப்ப வேண்டும் என்றார் அவர்.

பாதிக்கப்பட்டுள்ள நிலைமைகளின் படி, 3100க்கு மேலான கிராமங்கள் சந்தை தொடரமைப்பாக மீட்கப்பட வேண்டும் என்று வணிக அமைச்சகம் முடிவு மேற்கொண்டது. இதர பிரதேசங்களில், படிப்படியாக, சந்தைகளை மீட்கும் பணிகள், மேற்கொள்ளப்படும். முதலில், நடமாடும் சிறுக்கடைகள் மூலம், பொருட்கள் விற்பனை செய்யப்படும். அதையடுத்து, தற்காலிக சந்தைகள் உருவாக்கப்படும். கடைசியில், அதிகாரப்பூர்வமான விற்பனை தொடரமைப்புகள் உருவாக்கப்படும் என்று சேன் தே மிங் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பிரதேச சந்தைக்கான பொருட்களின் வினியோகத்தை முழுவதுமாக உத்தரவாதம் செய்யும் அதே வேளையில், சர்வதேச மீட்புதவியை ஏற்றுகொள்ளும் பணிகளையும் சீன வணிக துறை அமைச்சகம் மேற்க்கொண்டுள்ளது. வணிக துறை அமைச்சகத்தின் சர்வதேச ஆணையத்தின் தலைவர் சாங் க் நிங் கூறியதாவது—

நிலநடுக்கம் நிகழ்ந்ததுடன், நாங்கள், அனைத்து தகவல்களையும், தொடர்புடைய சர்வதேச அமைப்புகளுக்கும் சீனாவிலுள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அறிவித்தோம். 13ம் நாள் முதல், நாங்கள் நிதி உதவியை இடைவிடாமல் பெறுவதோடு, இந்நிதி உதவி கொண்டு பொருட்களை வாங்கி பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் அங்குள்ள மக்களுக்கும் அனுப்பி வருகின்றோம் என்றார் அவர்.

அடுத்து வரும் காலத்தில், பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் புனரமைப்பு போக்கில், வணிக துறை அமைச்சகம், சர்வதேச உதவி நிறுவங்களுடன் நெருங்கிய ஒத்துழைப்பை மேற்கொண்டு, அப்பிரதேசங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களையும் நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்யும் என்று சாங் க் நிங் தெரிவித்தார்.

இந்நிலநடுக்கம், அப்பிரதேசங்களில், கடுமையான இழப்புகளை உருவாக்கியுள்ள போதிலும், தேசிய சந்தைக்கான பொருட்கள் வினியோகத்தை பாதிக்க வில்லை என்று செய்தியாளர் கூட்டத்தில் சேன் தே மிங் தெரிவித்தார்.