மருத்துவ மனையை பார்வையிட்ட சீநத் தலைமை அமைச்சர்
cri
சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் இன்று சங்து நகரிலுள்ள குவாசி மருத்துவ மனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்றுள்ள நிலநடுக்கத்தில் காயமுற்ற மக்களைப் பார்த்தார். அத்துடன் மீட்புதவிப் பணியில் பங்கு கொண்டுள்ள ஜப்பானின் சர்வதேச மருத்துவ குழுவினர்களுக்கு அன்பான ஆறுதல் தெரிவித்தார். சீனா மிக கஷ்டமான தருணத்தில் மீட்புதவி அணியை அனுப்ப ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது. பின் மருத்துவ மனை அணியை தாமதமின்றி சீனாவுக்கு அனுப்பியது என்று அவர் கூறினார். சீன அரசின் சார்பில் ஜப்பான் அரசுக்கும் மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். வென்ச்சுவான் மாவடத்தின் யான் சியு வட்டத்தில் ஐ.நா தலைமை செயலாளர் பான் கி மூனை சந்தித்த பின் அவர் குவாசி மருத்துவ மனைக்கு சென்றார்.
|
|