சீன அரசவையின் நிலநடுக்க பேரிடர் நீக்க மீட்புதவி தலைமையகம் நேற்றிரவு தொடர்வண்டியில் 13வது கூட்டத்தை நடத்தியது. சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். சுகாதார மற்றும் நோய் தடுப்புப் பணியை ஆராய்ந்து பரவல் செய்து, புனரமைப்புத் திட்டக் குழுவை நிறுவ இக்கூட்டம் முடிவு செய்துள்ளது.
பேரிடழப்புப் பின் கடும் நோய் பரப்பின்மை என்பதை உறுதிப்படுத்துவது தற்போதைய அவசர கடமையாகும். இது, முக்கிய இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்று கூட்டம் சுட்டிக்காட்டியது.
புனரமைப்புப்பணி, நீண்டகாலமான கடினயான கடமையாகும். முதன்முதலில் திட்டம் செவ்வனே செய்ய வேண்டும். வென்சுவான் நிலநடுக்கம் பற்றிய நாட்டின் நிபுணர் கமிட்டியின் அறிவியல் வழிக்காட்டுடன், பனரமைப்பு தொடர்பான பொது திட்டத்தை வகுக்க வேண்டும் என்று கூட்டம் கோரியுள்ளது.
|