இதுவரை, சிச்சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், விபத்துகள் ஏதும் நிகழவில்லை என்று, சீனத் தேசிய பாதுகாப்பு உற்பத்திக்கான கண்காணிப்பு மற்றும் நிர்வாக ஆணையத்தின் துணைத் தலைவர் வாங் தேசியே தெரிவித்தார்.
இன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசுகையில், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் விபத்து நிகழாமல் தவிர்ககும் அவசர சுற்றறிக்கையை, பாதுகாப்பு கண்காணிப்பு ஆணையம் வெளியிட்டு, பாதிக்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள், அபாய மற்றும் வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் உடனடியாக உற்பத்தி நிறுத்தி, மக்களை வெளியேற்றுமாறு கோரியுள்ளது என்று அறிமுகப்படுத்தினார்.
முக்கியமான பிரதேசங்கள், துறைகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான கட்டுப்பாட்டையும், முக்கிய அபாய மூலவளத்துக்கான கண்காணிப்பையும் கட்டுப்பாட்டையும் வலுப்படுத்தி, பூர்வீக குன்றிய விபத்து நிகழ்வதற்கான பலவகை உள்ளார்ந்த பிரச்சினைகளை, இவ்வாணையம் காலதாமதமின்றி சரிபார்த்து நீக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
|