பாதிக்கப்பட்ட பொது மக்களைக் குடியமர்ப்பது, மீட்புதவிப் பணியில் மிக முக்கிய கடமையாக மாறியுள்ளது என்று, சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் இன்று தெரிவித்தார். நடமாடும் வீடுகளின் உற்பத்தி மற்றும் பொருத்தல கடமையைப் பொறுப்பேற்கும் தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை இறுகப்பற்றி, பாதிக்கப்பட்ட மக்கள் தாயகத்தைப் புனரமைப்பதற்குப் பங்காற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
சிச்சுவான் வென்சுவான் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை, ஒரு கோடியே 40 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பெருமளவான மீட்புதவி கூடாரங்களை வழங்குவதோடு, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 10 லட்சம் நடமாடும் வீடுகளை முதன்முதலில் கட்ட, சிறப்பு ஒதுக்கீடு செய்வதாக சீன அரசு முடிவு செய்துள்ளது.
பல்வேறு இடங்கள், மீட்புதவி பணியை பெரிதும் ஆதரித்ததுடன், பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சி போக்கை நிலைநிறுத்த வேண்டும். சமூகத்தின் இணக்கத்தையும் நிதானத்தையும் பேணிகாக்க வேண்டும் என்று ஹுசிந்தாவ் வலியுறுத்தினார்.
|