கடந்த சில நாட்களில், வெளிநாட்டு செய்தி ஊடகங்கள், சீன அரசும் மக்களும் மேற்கொண்ட பேரிடர் நீக்க மீட்புதவிப் பணியை பாராட்டியுள்ளன.
கென்ய மக்கள் நாளேடு 23ம் நாள் கட்டுரையை வெளியிட்டது. ஒன்றுப்பட்டு, பேரிடர் நீக்க எழுச்சியை சீன மக்களிலிருந்து கற்றுகொள்ளுமாறு இக்கட்டுரை கென்ய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.
வென் ச்சுவன் நிலநடுக்கம், சீன மக்களை ஒன்றுப்படச் செய்தது என்று போலந்தின் "தேர்தல் செய்தியேடு" 23ம் நாள்வெளியிட்ட கட்டுரையில் கூறியது.
சீனாவின் தலைவர்கள், மக்களில் அக்கறை செலுத்துகின்றனர் மட்டுமல்ல, நிலநடுக்கம் நிகழ்ந்ததுடம், பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு விரைந்து சென்றனர் என்று சிங்காபூர் லியன் ஹெ சௌ போ 23ம் நாள் வெளியிட்ட கட்டுரையில் தெரிவித்தது.
நிலநடுக்கம் நிகழ்ந்த 20 நிமிடங்களுக்குள், சீன மக்கள் விடுதலைப்படை, முன்னெச்சரிக்கை அமைப்பு முறையை துவக்கியது என்று ரேதுல்ஸ் செய்தி நிறுவனம் 22ம் நாள் வெளியிட்டது.
இப்பேரிடர் நீக்க மீட்புதவி பணியில், சீன தலைவர்களும் செய்தி ஊடகங்களும் செயல்படுத்தமை, மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று ஜெர்மனி தியே ஸேத் செய்தியேடு 22ம் நாள் சுட்டிக்காட்டியது.
பல்லாயிரம் தொண்டர்கள், பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு சென்றனர். அனைத்து மக்கள் அணி திரட்டப்பட்டனர் என்று பிரேஞ்சு விடுதலை செய்தியேடு 22ம் நாள் கட்டுரையை வெளியிட்டு தெரிவித்தது.
|