• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-26 08:49:05    
ஹெய்நான் மாநிலத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி

cri

தைவான் மாநிலத்தைச் சேர்ந்த தைவான் நூல் வெளியீட்டகச் சங்கம், அம்மாநிலத்தின் சுமார் 10 வெளியீட்டகங்களின் நூல்களை ஹெய்நான் மாநிலத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குக் கொண்டுவந்துள்ளன. பெருநில பகுதியின் தொடர்புடைய துறைகளுடன் பரிமாற்றம் கொள்ள இச்சங்கம் விரும்புகின்றது. இந்த முறை, தைவான் நூல் வெளியீட்டகச் சங்கம் ஏறக்குறைய 10 வெளியீட்டகங்களின் நூல்களைத் திரட்டியது. தைவான் மாநிலத்தில் சிறந்த நூல்கள் காணப்படுகின்றன. எனவே, பெருநிலபகுதியின் பொது மக்களுக்கு இந்த சிறந்த நூல்களை அறிமுகப்படுத்தலாம் என்று சங்கத்தின் செயலாளர் wumengping அம்மையார் தெரிவித்தார்.


புத்தக கண்காட்சி நடைபெற்ற இடமான ஹெய்நான் மாநிலம், சீனாவின் நாகரீகம் தொற்றுவாய்களில் ஒன்றாகும். தவிர, இம்மாநிலம் சீனாவில் புகழ் பெற்ற 4 கண்டுபிடிப்புகளில் அச்சுத் தொழில் நுட்பத்தின் தொற்றுவாய் இடமாக ஹெய்நான் திகழ்கிறது. Kaifeng நகரம், சீனாவின் பழங்காலத் தலைநகரகமாக இருந்தது. Luoyang நகரம், பண்டைகாலத்தில் சீனாவின் நூல் தயாரிப்பு மையமாக இருந்தது. இப்புத்தகக் கண்காட்சியின் தலைப்பை வெளிப்படுத்துமாறு, தலைநகர் zhengzhou,kaifeng,luoyang,anyang ஆகிய நகரங்களில் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொண்டது. வாசகர் கூட்டம் உள்ளிட்ட ஏறகுறைய 120 நடவடிக்கைகள் மூலம், மிக பல வாசர்கள் இம்மாபெரும் விழாவில் கலந்துகொள்ளலாம்.


கண்காட்சியில் சீனாவின் வெளியீட்டகத் துறைக்கான உயர் நிலை கருத்தரங்கில், ஹெய்நான் மாநிலத்தின் கம்யூனிஸ்ட் கட்சி கமிட்டியின் தலைமைச் செயலாளர் xuguangchun, சீனத் தேசிய செய்தி வெளீட்டக ஆணையத்தின் தலைவர் liubinjie, அறிவாளர்கள், நிபுணர்கள் ஆகியோர் உரையாறினர். பொது பண்பாட்டுச் சேவை அமைப்புமுறையை விரைவாக உருவாக்க வேண்டும் என்று சீனத் தேசிய செய்தி வெளீட்டக ஆணையத்தின் தலைவர் liubinjie கூறினார்.


நண்பர்களே, ஹெய்நான் மாநிலத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.