• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-26 20:06:10    
நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத chengdu நகரத்தின் முதலீட்டுச் சூழல்

cri
மே திங்கள் 12ம் நாள், சிச்சுவான் மாநிலத்தின் வென்சுவான் மாவட்டத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. சிச்சுவான் மாநிலத்தில் சில பிரதேசங்களுக்கு உயிர் மற்றும் சொத்து இழப்பு ஏற்பட்டது. இம்மாநிலத்தின் தலைநகர் chengdu வுக்கும் வென்சுவான் மாவட்டத்துக்குமிடையிலான தூரம், 100 கிலோமீட்டரை விட குறைவான தொலைவுதான். Chengdu நகரத்தில் கடுமையான இழப்பு ஏற்படாத போதிலும், மக்களின் உற்பத்தி மற்றும் அடிப்படை வாழ்க்கைக்கு வென்சுவான் நிலநடுக்கம் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இது வரை, chengdu நகரத்தின் பெரிய தொழில் நிறுவனங்கள் குவிந்த புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலத்தில் பல தொழில் நிறுவனங்கள் மீண்டும் உற்பத்தியில் ஈடுபடத் துவங்கியுள்ளன.

புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலத்தில் சுமார் 6000 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் ஏறக்குறைய 500 நிறுவனங்கள் வெளிநாட்டு வணிக முதலீட்டுத் தொழில் நிறுவனங்களாகும். உலகின் முன்னணியிலுள்ள 500 தொழில் நிறுவங்களைச் சேர்ந்த Intel, ibm உள்ளிட்ட சுமார் 20 தொழில் நிறுவனங்கள் இதில் உள்ளடக்கம். நிலநடுக்கம் ஏற்பட்ட பின், இந்த வளர்ச்சி மண்டலத்தின் தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தின. ஆனால், நிலநடுக்கத்துக்குப் பிந்திய இரண்டாவது நாள், அவ்வளர்ச்சி மண்டலத்தின் பல்வேறு வாரியங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஒரு புறம், இம்மண்டலத்தின் நீர் மற்றும் மின்சார வினியோகம் உத்தரவாதம் செய்துள்ளது. மறு புறம், தொழில் நிறுவனங்களின் நடைமுறை நிலைமையையும் தேவைகளையும் ஆழமாக அறிந்துகொளும் வகையில் கள ஆய்வு மேற்கொள்ள, சிறப்புப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். உற்பத்தியை மீட்டெடுக்கும் பணியை மேற்கொண்ட போது, தொழில் நிறுவனங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு வாரியங்கள் சேவைகளை பன்முகங்களிலும் வலுப்படுத்தியுள்ளன என்று Chengdu நகரத்தின் புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலத்தின் பொறுப்பாளர் jinggang தெரிவித்தார். அவர் கூறியதாவது:

கடந்த சில நாட்களில், தொழில் நிறுவனத்தைச் சேர்ந்த கட்டிடங்களின் நிலைமையை நாம் உறுதிப்படுத்தினோம். இதன் மூலம், இந்த கட்டிடங்கள் அல்லது ஆலைகள் வரையறைக்குப் பொருந்தியவையா இல்லையா?நிலநடுக்கத்தால் அவற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டதா இல்லையா என்பவை பற்றி நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

மே திங்கள் 18ம் நாள் வரை, chengdu புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலத்தில் சுமார் 261 தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை மீட்டுள்ளன. இது, தொழில் நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கையில் 75 விழுக்காட்டை வகிக்கிறது. இந்த வளர்ச்சி மண்டலம் தகுந்த முறையில் பணியை மேற்கொண்டதால், சில தொழில் நிறுவனங்கள் நிலநடுக்கத்துக்கு அடுத்த நாளே உற்பத்தியை மீளத் துவங்கின. எடுத்துக்காட்டாக, மருந்து உற்பத்தியில் ஈடுபடும் diao குழுமம், kangning ஒளியிழை வடத் தொழில் நிறுவனம், விமானச் செப்பனிடும் haite குழுமம். இவையெல்லாம், நிலநடுக்க பேரிடர் மீட்புப் பணிக்கு உறுதியான பொருள் உத்தரவாதத்தை வழங்கின என்று இந்த வளர்ச்சி மண்டலத்தின் பொறுப்பாளர் jinggang தெரிவித்தார். அவர் கூறியதாவது:

இம்மண்டலத்தின் சில தொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத் தேவைகளை நிறைவு செய்யும். இந்தத் தொழில் நிறுவனங்கள் சமூகப் பொறுப்பை நல்லபடி ஒற்றுக்கொண்டன என்றார் அவர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பின், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலைமை பற்றிய கூட்டம் chengdu புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலநடுக்கத்துடன் தொடர்புடைய தகவல்கள் வெளியிடப்பட்டன. இதன் மூலம், இத்தொழில் நிறுவனங்கள் நிலநடுக்கத்தின் நிலைமை பற்றி புரிந்துகொண்டன. தவிர, இத்தொழில் நிறுவனங்களின் பொறுப்பாளர்களை அழைத்து உரையாடல் கூட்டம் நடத்தி, தொழில் நிறுவனங்களின் இன்னல்களை அறிந்துகொண்டு, உற்பத்தியை மீட்டெடுப்பதற்கு இவ்வளர்ச்சி மண்டலம் உதவி செய்தது. சில இன்னல்கள் நிலவிய போதிலும், intel போன்ற செம்மையான வசதிகளைப் பயன்படுத்தும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், நிலநடுக்கத்துக்கு பிந்திய அதிர்வுகளால் பாதிக்கப்பட்டு உற்பத்தி மீட்டெடுக்க முடியவில்லை. ஆனால், இந்த மண்டலத்தின் பல்வேறு வாரியங்கள் மேற்கொண்ட முயற்சிகளை எல்லா தொழில் நிறுவனங்களும் வெகுவாகப் பாராட்டி, Chengdu நகரத்தின் முதலீட்டுச் சூழலில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளன என்று தெரிகிறது. இந்த வளர்ச்சி மண்டலத்தின் பொறுப்பாளர் Jinggang கூறியதாவது:

இது வரை, chengdu நகரத்தின் முதலீட்டுச் சூழல் தொடர்ந்து நன்றாக இருக்கிறது என்று chengdu நகரத்திலுள்ள intel,ibm,nokia உள்ளிட்ட வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் அனைத்தும், சொந்த வழிமுறை மூலம், தலைமையகத்திடம் கொடுத்த அறிக்கையில் தெவித்ததாக அவர் கூறினார்.

நிலநடுக்கம், ஒரு தற்காலிக தடையாகும். தொழில் துறையின் மாற்றத்தில் சிச்சுவான் மாநிலம் மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, முழுமையான அடிப்படை வசதிகள், நிறைவான எரியாற்றல் வினியோகம், ஒப்பீட்டளவில் மலிவான நிலம் மற்றும் உழைப்பு ஆற்றல் ஆகியவை, இந்நகரத்தில் காணப்படும் மேம்பாடுகளாகும் என்று jinggang தெரிவித்தார். அவர் கூறியதாவது:

நம் முதலீட்டுச் சூழலும், தொழில் நிறுவனங்களும் சீர்குலைக்கப்படவில்லை. வெளிநாட்டு மற்றும் கடலோர பிரதேசத்தின் தொழில் நிறுவனங்கள் Chengdu நகரத்தில் முதலீடு செய்ய தக்கவை என்று அவர் கூறினார்.

நிலநடுக்கத்தில், chengdu நகரத்தின் மையப் பகுதி பாதிக்கப்படவில்லை. இந்நகரத்தின் புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலம் சிறந்த முன்னெச்சரிக்கை அமைப்புமுறையைப் பெற்றுள்ளது. நடைமுறை நடவடிக்கைகள் மூலம் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தலைசிறந்த ஆதரவு அளிக்கிறது என்றார் அவர்.