நேற்று இரவு வரை, சீனாவின் பல்வேறு இடங்கள் மற்றும் சி ச்சுவன் மாநிலத்தைச் சேர்ந்த நோய் தடுப்பு பணியாளர்கள் அனைத்து வட்டங்களிலும் கிராமங்களிலும் அமர்த்தப்பத்துள்ளனர். இன்று சீன சுகாதார அமைச்சகம் வெளியிடப்பட்ட தகவல் இதை தெரிவித்தது.
இன்று 8 மணி வரை, சுகாதார அமைச்சகம், பேரிடர் நீக்க மீட்புதவிப் பணிக்கான 3600 சுகாதார மற்றும் நோய் தடுப்பு பணியாளர்களை அனுப்பியுள்ளது. அவர்களும், பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் சுகாதார மற்றும் நோய் தடுப்பு பணியில் பங்கு கொண்டுள்ளனர்.
சுகாதார மற்றும் நோய் தடுப்பு பணிகளை பன்முகங்களிலும் வலுப்படுத்தும் வகையில், அதில் ஈடுபடும் பணியாளர்கள், அனைத்து மாவட்டங்களிலும் கிராமங்களிலும் நுழைய வேண்டும் என்று சீன அரசவை பேரிடர் நீக்க மீட்புதவி தலைமையகத்தின் சுகாதார மற்றும் நோய் தடுப்பு குழுவின் தலைவர் கௌ ச்சியங் நேற்று கோரிக்கை விடுத்தார்.
|