• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-27 10:54:50    
நோய் தடுப்பிலுள்ள நிர்ப்பந்தத்தைச் சமாளிக்கும் சீனா

cri
சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், சீன அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு, பேரிடருக்குப் பிந்திய நோய் தடுப்புப் பணியை செய்து வருகின்றது. தற்போது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், கடும் தொற்று நோய் மற்றும் திடீர் பொது சுகாதார சம்பவங்கள் ஏதும் காணப்படவில்லை.

நிலநடுக்கத்திற்குப் பின், சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டில், சீன நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், நோய் முன்னெச்சரிக்கை அறிவிப்பு முறைமையை அவசரமாகத் துவக்கியது. நிலநடுக்கம் நிகழ்ந்ததற்கு பிந்திய அரை திங்களுக்குள், முழு நாட்டின் பல்வேறு இடங்களின் நோய் தடுப்புப் பணியாளர்கள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், நச்சு வாயுவை நீக்கும் திரவம் தெளித்து, எலி, கொசு மற்றும் ஈக்களை ஒழித்து, பூதவுடல்களைப் புதைத்து, பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்களைத் தனித்தனியாக குடியமர்த்தியுள்ளனர். இதன் விளைவாக, தம்மால் இயன்றளவு நோய் தடுப்பு சவாலைச் சமாளித்துள்ளனர். தற்போது, முழு நாட்டிலும், 13 ஆயிரத்துக்கு மேற்பட்டோர், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வென் ச்சுவான் பிரதேசத்துக்குச் சென்று, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியை மேற்கொண்டுள்ளனர். சீன அரசு உயிரிழந்தோரின் பூதவுடல்களைக் கையாளும் வழிமுறையை உடனடியாக வெளியிடுவதால், வென் ச்சுவான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் பெரும்பாலான பூதவுடல்கள் உரிய முறையில் கையாளப்பட்டுள்ளன. தற்போது, பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் நோய் தடுப்புப் பணியில் பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை.