சி ச்சுவான் வென் ச்சுவான் கடும் நிலநடுக்கத்தால் சீனப் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட எதிர்மறையான பாதிப்பு, வரம்புக்கு உட்பட்டதாகவும் தற்காலிகமாகவும் இருக்கிறது. சீனாவின் பன்முகப் பொருளாதாரத்தின் இயக்கத்தை இது பாதிக்காது என்று சீனச் சமூக அறிவியல் கழகத்தின் நாணய ஆய்வகத்தின் ஆய்வாளர் யீ ச்சியன் ழோங், செய்தியாளருக்குப் பேட்டியளிக்கும் போது தெரிவித்தார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிதேசங்கள், சீனாவின் பொருளாதாரத்தில் வளர்ச்சியடையாத தென்மேற்கு மலைப் பகுதியில் உள்ளன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்புத் தொகை, பெரிதாக இருந்த போதிலும், சீனாவின் மொத்த பொருளாதாரத்துடன் ஒப்பிடும் போது, பொருளாதாரத்தின் அடிப்படையை இது பாதிக்காது. தவிர, புனரமைப்புப் பணியில், நடுவண் நிதித் துறை செய்த மாபெரும் ஒதுக்கீடு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை முன்னேற்றும் ஒரு முக்கிய காரணியாக மாற முடியும் என்றும் அவர் கூறினார்.
|