• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-29 10:44:38    
எட்டுப் புகழ்பெற்ற இடங்கள் (ஆ)

cri

 

San Shan பெண் துறவி மடம்

San Shan என்றால் சீன மொழியில், மூன்று மலைகள் என்று பொருள். San Shan பெண் துறவி மடம், Cui wei, Ping po, Lu shi ஆகிய மூன்று மலைகளிடையில் உள்ளதால், அது San Shan துறவி மடம் என்று அழைக்கப்படுகிறது. 1151ம் ஆண்டில் இந்த மடம் கட்டியமைக்கப்பட்டது.

மலை வாயை எதிர்நோக்கி, ஐந்து பெரிய மண்டபங்கள் இருக்கின்றன. அங்கு சாக்கியமுனி உருவச் சிலை இருக்கிறது. அதன் வாயில் காலின் கீழே, வெள்ளைச் சலவை கல் இருக்கிறது. அது, Shui yun கல் என அழைக்கப்படுகிறது. அதில், மலை, ஆறு மனிதர்கள், விலங்கு, மலர் முதலிய இயற்கையான வடிவங்கள் உள்ளன.

San Shan பெண் துறவி மடத்தின் வடக்குப் பகுதி, பரந்ததாக இருக்கிறது. அங்கு, பல இயற்கைக் காட்சிகள் காணப்படலாம்.

Da bei கோயில்

Da bei கோயில், San Shan பெண் துறவி மடத்திற்கும் Long quan பெண் துறவி மடத்திற்கும் இடையிலான மலையின் நடுவில் இருக்கிறது. இது, 1033ம் ஆண்டில் கட்டியமைக்கப்பட்டது.

இது, கிழக்கு நோக்கியதாய் மேற்கில் அமைந்துள்ளது. பெரிய மண்டபத்தில், நான்கு தேவர்களின் உருவச் சிலைகள் உள்ளன.

மண்டபத்திற்கு முன், மிங் வம்சக்காலத்தில் பயிரிட்ட மூங்கில்கள் காணப்படலாம். இம்மூங்கில்கள் பசுமையாக காட்சி அளிக்கின்றன. மண்டபத்தின் நடுவில், மூன்று புத்தர்களின் சிலைகள் இருக்கின்றன. இரு பக்கங்களில், 18 புத்தர் உருவச் சிலைகள் நிற்கின்றன. அவை, யுவான் வம்சக்காலத்தின் சிற்பியான லியூ யுவான் செய்தவை. அவை, பல்வேறு உருவங்களில் காணப்படுகின்றன.