சிச்சுவான் மாநிலத்துக்கான நன்கொடை
cri
புள்ளிவிபரங்களின்படி, நேற்று வரை, வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், ஹாங்காங், மக்கௌ மற்றும் தைவானின் தொழில் நிறுவங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 290 கோடி யுவான் நன்கொடையாக வழங்கியுள்ளன.
இத்தகைய தொழில் நிறுவனங்கள் 240 கோடி யுவான் ரொக்க நாணயம் வழங்கியுள்ளன. 50 கோடி யுவான் மதிப்புள்ள உணவுப் பொருட்கள், மருந்துகள், தொலைத்தொடர்பு சாதனங்கள், வாகனங்கள் முதலியவற்றையும் இந்நிறுவனங்கள் வழங்கியுள்ளன. தவிர, 26 கோடி யுவான் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வழங்க சில தொழில் நிறுவனங்கள் வாக்குறுதி அளித்துள்ளன என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தி அலுவலகம் இன்று அறிவித்தது.
|
|