சீன வென்ச்சுவான் நிலநடுக்கத்திற்குப் பின். சர்வதேசச் சமூகம், தொடர்ந்து பல்வகையில் சீனாவுக்கு ஆறுதல் தெரிவித்து, உதவிகளை வழங்கி வருகிறது.
நேற்று இரவு 8 மணி வரை, 156 நாடுகளின் தலைவர்களும் பல்வேறு துறையினரும், வெளிநாடுகளிலுள்ள சீனத் தூதாண்மை நிறுவனங்களுக்குச் சென்று நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தனர்.
அண்மையில், மேலும் பல நாடுகள், சீனாவுக்கு உதவிகளை வழங்கியுள்ளன.
இஸ்ரேல் அரசு, 15 இலட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள உதவிப் பொருட்களை, சீனாவுக்கு வழங்கியுள்ளது.
ஜெர்மன் hessen மாநில அரசு, சீனாவுக்கு 10 இலட்சம் யூரோ மதிப்புள்ள உதவிப் பொருட்களை வழங்க முடிவெடுத்தது. தவிர, ஜெர்மன் அரசின் அவசரகால துறை வழங்கிய, குடிநீரைத் தூய்மைப்படுத்தும் 6 கருவிகள், சிச்சுவானின் dujiangyan நகருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஹங்கேரி முஸ்லிம் சங்கம், பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு 2 இலட்சத்து 6 ஆயிரம் அமெரிக்க டாலரை வழங்கியது.
ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் சீனாவுக்கு கூடாரங்கள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை வழங்கியது.
சீனாவுக்கு 700 கூடாரங்களை வழங்க, கனடா அரசு முடிவெடுத்தது.
|