 1. கண்களுக்குப் பாதுகாப்பு என்ற சிறப்பு தொகுப்பு. தொகுத்து அனுப்பியவர் எமது அன்பு நேயர் மறைமலை நகர், சி, மல்லிகாதேவி.
கண்களை பாதுகாக்க சில எளிய முறைகள்
முருங்கைக் கீரையில் நிறைய சத்து உள்ளது. வாரம் இரு முறை கைப்பிடி அளவு சமைத்து சாப்பிடவும். பொரியல் வைத்து சாப்பிடக் கூடாது. சாம்பாரில் போட்டு சாப்பிடவும்.
கேரட்டை நன்றாக ஊறவைக்க வேண்டும், இதற்கு சுமார் அரை மணி நேரம் தேவை. நீரில் ஊறிய பிறகு நன்கு தேய்த்து பாலுடன் கலந்து விழுதாக அரைத்து சாப்பிடவும்.
மீன் எண்ணெய் மாத்திரையும் சாப்பிடலாம்.
கண்களுக்கு என்று சிறு பயிற்சி உள்ளது. இடமும் வலமும் தலையை அசைக்காமல் கண் மட்டும் அசைத்து பயிற்சி செய்தால் நல்லது.
காபி, தேநீர் அதிகம் கூடாது. தேநீரை நீர் நிறையவிட்டு கொதிக்க விட்டு சர்க்கரை, பால் சேர்க்காமல் சாப்பிட வேண்டும். தேயிலைத் தூள் ஒரு தேக்கரண்டி போட்டால் போதும். இப்படி உள்ள தேநீரைக் குடிக்கலாம்.
கணிணியை அதிக நேரம் பார்க்கக் கூடாது. நடு நடுவே பச்சை வண்ணத்தைப் பார்க்க வேண்டும்.
தொலைக்காட்சியும் அதிக நேரம் பார்க்கக் கூடாது. கண்கள் சோர்வடைந்துவிடும்.
கண்களுக்கு விலை கிடையாது. அவ்வளவு மதிப்புள்ளது. அதை நாம் பாதுகாக்க வேண்டும்.
நேயர்கள் இதுவரை, கண்களுக்கு பாதுகாப்பு என்ற சிறப்பு தொகுப்பைக் கேட்டீர்கள்.
நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.

2. புகையிலையின் கெடுதல் பற்றி கூறுகின்றோம். தொகுத்து அனுப்பியவர் எமது அன்பு நேயர் மறைமலைநகர், சி.மல்லிகாதேவி
அன்பான நேயர்களே, வாகன புகையை விட புகையிலையினால் வரும் புகையில் நச்சு பொருள் அதிகம் உள்ளது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?
புற்றுநோயை கூட விளைவிக்கும். என்னால் முடியும் என்று மனது உறுதி கொண்டு புகைபிடிப்போர் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
பட்டென்று உடனே நிறுத்தாமல் படிப்படியாகப் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
யோகா உட்பட பல வழிகள் உள்ளன.
புகைப்தால் வெளி வரும் புகையினால் கர்ப்பமுற்ற பெண்கள் அதிகம் பாதிக்கிப்படுகின்றனர்.
வயிற்றில் உள்ள குழந்தைக்கு அதிகம் பாதிப்பு ஏற்படும். குழந்தை பிறந்த பிறகும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும். இறந்து போவதற்கும் வாய்ப்பு உள்ளது.
பெரியவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு இதுவும் ஒரு காரணம். நுரையீரலையும் பாதிக்கும்.
மூக்குப்பொடி, வாயில் புகையிலை வைத்து கொள்வதும் ஆபத்தான செயல்களே.
ஒருவர் நான்கு சிகரெட் குடித்தால் பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஒரு சிகரெட் பிடிப்பதால் உண்டாகும் தீமை ஏற்படும்.
எனவே புகையிலையை தவிர்ப்போம்.

3. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இனிதான வாழ்விற்கு சில யோசனைகள் பற்றி கூறுகின்றோம். தொகுத்து அனுப்பியவர் எமது அன்பான நேயர், சி.மல்லிகாதேவி.
சர்க்கரை நோய் வாய்பட்டவர்கள் முதலில் மன அமைதி காக்க வேண்டும். ஏனென்றால், மனக்கவலை, மனப்பதற்றம்,மன உளைச்சல் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
அடுத்ததாக, உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அனைவருக்கும் ஏற்ற எளிய உடற்பயிற்சி நடைப் பயிற்சியே ஆகும்.
எப்போதும் உடல் எடையை சரியாக பாதுகாக்க வேண்டும். தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது நல்லது.
அடுத்ததாக மருந்து மாத்திரைகளைப் பற்றியது
வெந்தயம் சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்து, அதில் இருக்கக் கூடிய நார்ச்சத்து பயன்தரக் கூடியது
உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்காமல், மருந்து, மாத்திரைகளை கூட்டுவதோ, குறைப்பதோ ஆபத்தில் முடியும். பத்தியம் இல்லை. உணவுக் கட்டுப்பாடு இல்லை என சொல்லும் போலி மருத்துவர்களை ஒதுக்கிவிடுங்கள்.
அருகம்புல் சாறு, வேப்பிலைச்சாறு, பாகற்காய் சாறு, போன்றவை சர்க்கரை நோய்க்கு மருந்தல்ல.
மூலிகை மருத்துவம், மற்றும் நாட்டுமருத்துவ முறைகள் என விளம்பரம் செய்யப்படும் மருத்துவமுறைகள் சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதற்கு அறிவியல் பூர்வமான நீதியாக எந்த விதமான நிரூபணமும் செய்யப்படவில்லை.
|