க்ளீட்டஸ் –சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியைக் கேட்டு, சீன உணவு வகையை தயாரிப்பதன் மூலம், சீன உணவு பண்பாடு பற்றி அறிந்து கொள்ளலாம். வாருங்கள். வாணி – நீங்கள் சொன்னது சரி. இன்றைய நிகழ்ச்சியில் இன்னொரு சுவையான உணவு வகை பற்றி தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.
க்ளீட்டஸ் – அசைவ உணவு வகைகளில் மீன் இறைச்சி முக்கிய இடம் வகிக்கின்றது. தற்கால வாழ்வில் அதிக மீன் வகைகளைச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். வாணி – கொழுப்புச்சத்து குறைவான மீன் இறைச்சியில் அதிக புரதம் உள்ளது. க்ளீட்டஸ் – ஆமாம். வாணி – இன்று ஒரு வகை மீன் உணவு பற்றி எடுத்து கூறுகின்றோம். க்ளீட்டஸ் – தேவையான பொருட்களை நீங்கள் எடுத்து கூறுங்கள். வாணி – சரி. முதலில், 500 கிராம் எடையுள்ள ஒரு ஆற்று மீன் தேவை
பட்டாணி 200 கிராம பச்சை மிளகாய் 1 சிவப்பு மிளகாய் மூன்றில் ஒரு பகுதி இஞ்சி 3 துண்டுகள் வெங்காயத்தலை போதிய அளவு உருளைகிழங்கு மாவு ஒரு தேக்கரண்டி உப்பு ஐந்தில் ஒன்று தேக்கரண்டி அரிசி மது ஒரு தேக்கரண்டி ஒரு முட்டையின் வெள்ளை பகுதி சமையல் எண்ணெய் 4 தேக்கரண்டி நல்லெண்ணெய் மூன்றில் ஒன்று தேக்கரண்டி
க்ளீட்டஸ் – முதலில், மீனின் செதில், முள் ஆகியவற்றை நீக்க வேண்டும். இதனை துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும். பிறகு, மீன் துண்டுகளை உருளைகிழங்கு மாவு, முட்டையின் வெள்ளை பகுதி, ஒரு தேக்கரண்டி அரிசி மது, உப்பு ஆகியவற்றுடன் சேர்த்து கிளற வேண்டும். 30 நிமிடங்கள் அப்படியே வையுங்கள்.
|