• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-27 09:10:26    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை:  கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் உங்களின் சொந்தக் குரலிலான நமது நிகழ்ச்சிகள் பற்றிய உமது எண்ணங்களின் வண்ணத்தொகுப்பை கேட்க நீங்கள் தயாரா?
க்ளீட்டஸ்: வழங்க நாம் தயார். சரி, நிகழ்ச்சியின் முதல் கடிதம் இலங்கை கினிகத்தேனை எம். பி. மூர்த்தி எழுதியது. பணவீக்கத்தை சீனா கட்டுப்படுத்துவது பற்றிய செய்தித்தொகுப்பு நிகழ்ச்சி கேட்டேன். எரியாற்றலை சிக்கனப்படுத்தி, உள்நாட்டு பொருளாதார மொத்த செலவினை கட்டுப்படுத்தி, விவசாயத்துறையினை விரிவுப்படுத்தி, நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த சீன அரசு முயன்று வருவது, நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். எந்த ஒரு நாட்டுக்கும் தேவையான அம்சங்கள் இவை.


கலை: அடுத்து, நேருக்கு நேர் நிகழ்ச்சி பற்றி பெரியகாலாப்பட்டு பி. சந்திரசேகரன் எழுதிய கடிதம். புதுக்கோட்டையை சேர்ந்த நேயர்களுடனான பேட்டியை நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கேட்டோம். நேருக்கு நேர் நிகழ்ச்சியில் புதிய நேயர்களை பேட்டி காண்பது, நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்து வருகிறது. இனி வரும் நாட்களில் இன்னும் பல புதிய நேயர்களின் கருத்துக்களை தெரிந்துகொள்ள மிகவும் ஆவல்.
க்ளீட்டஸ்: நட்புப்பாலம் நிகழ்ச்சி பற்றி ஆரணி ஜே. அண்ணாமலை எழுதிய கடிதம். இந்திய பயணத்தின் போது சீன வானொலியின் அறிவிப்பாளர்கள் வாணி மற்றும் விஜயலட்சுமி இருவரும் குமுதம் இதழுக்கு அளித்த பேட்டியின் ஒலிப்பதிவை கேட்டோம். மிக அழகாக பேட்டியில் பதிலளித்த இருவருக்கும் பாராட்டுக்கள்.


கலை: அடுத்து மறைமலைநகர் சி. மல்லிகாதேவி எழுதிய கடிதம். சீனச் சமூக வாழ்வு நிகழ்ச்சியில் வான்மதி அவர்கள், சீன மக்களிடையே ஏற்பட்டுள்ள உணவுப் பழக்கம் பற்றி கூறியதைக் கேட்டேன். இரு வாய் இறைச்சிக்கு சமமாக எவ்வளவு காய்கறிகள் சாப்பிடவேண்டும் என்று நிகழ்ச்சியில் கூறியது, பயனுள்ளதாக அமைந்தது.
க்ளீட்டஸ்: இலங்கை காத்தான்குடி எம். எம். ஃபாத்திமா ம்ஃப்ரா எழுதிய கடிதம். மிகவும் சிறப்பான நிகழ்ச்சிகளுடன் உலக மக்களின் பாராட்டினை பெற்ற சீன வானொலிக்கு முதல் வாழ்த்து எப்போதும். பெய்சிங் ஒலிம்பிக் எனும் பொது அறிவுப்போட்டியில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி. தொடர்ந்து இப்படி போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது என் ஆவல்.


கலை: தொடர்ந்து நட்புப்பாலம் நிகழ்ச்சி பற்றி, உத்திரக்குடி. சு. கலைவாணம் ராதிகா எழுதிய கடிதம். பகளாயூர் பி. ஏ. நாச்சிமுத்து அவர்கள் விவசாய சங்க செயலாளர் திரு. துரை மாணிக்கம் அவர்களுடன் நேர்காணல் கண்ட நிகழ்ச்சியை கேட்டோம். சீனா விவசாயத்துறையாக இருந்தாலும் மற்ற எந்த துறையாக இருந்தாலும் மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. அரசால் விவசாயிகளுக்கு எள்ளளவு கூட துன்பமில்லை. அரசால் அதிக நன்மை உண்டு என்ற தகவல் கேட்டு பூரிப்படைந்தோம்.


க்ளீட்டஸ்: அடுத்து நேயர் நேரம் நிகழ்ச்சி பற்றி தென்பொன்முடி தெ. நா. மணிகண்டன் எழுதிய மடல். வானொலி வரலாற்றில் எந்த நிலையும் செய்யாத செயலை சீன வானொலி நிலையம் செய்துள்ளது. நேயர்களின் குரலிலேயே நிகழ்ச்சி பற்றி கருத்து கூறவைப்பதுதான் அது. இது நேயர்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு. ஆனால் இவ்வாய்ப்பை நண்பர்கள் தவறாக பயன்படுத்திக்கொள்ளக்கூடாது. குறைந்த நேரத்தில் நிறைவாக பேசினால் நிகழ்ச்சிக்கு அது அழகு தரும் என்பதை நண்பர்கள் புரிந்து செயல்படவேண்டும்.


கலை: தொடர்ந்து மணமேடு எம். தேவராஜா எழுதிய கடிதம். சீனச் சமூக வாழ்வு நிகழ்ச்சியில் திபெத்தில் உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு பற்றி கேட்டேன்.. உலகின் கடைசி தூய்மையான இடம், அதன் வணிகப் பெருக்கத்தாலும், சிங்காய் திபெத் இருப்புப்பாதையாலும், அதை தக்கை வைத்துக்கொள்ளுமா என்ற மக்களின் கேள்வி நியாயமானதே. ஆயினும் இன்சி மாவட்ட அரசும், பிற அரசுகளும், மக்களும் இணைந்து சுற்றுச்சூழலை காக்க தீர்மானித்து செயலில் இறங்கியிருப்பது, அது காக்கப்படும் என்ற உறுதியை அளிக்கிறது.