சீனாவின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவி அளித்த அனைத்து நாடுகளுக்கும் அமைப்புகளுக்கும் தனி நபர்களுக்கும் மீண்டும் நன்றி தெரிவிக்க விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சின் செய்திதொடர்பாளர் சின் காங் 27ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
வெளியுறவு அமைச்சின் புள்ளிவிபர படி, 155 நாடுகளின் அரசுகள், அரசு சாரா நிறுவனங்கள், 10க்கு மேலான சர்வதேச நிறுவனங்கள் ஆகியவை சீனாவுக்கு நிதி உதவி அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளன. மொத்த தொகை 190 கோடி யுவானை எட்டியது. தவிர, 54 நாடுகளின் அரசுகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், சீனாவுக்கு பொருட்கள் உதவி அளிக்க விருப்பம் தெரிவித்தன. அவற்றின் மதிப்பு தொகை 52 கோடியே 40 இலட்சம் யுவானை எட்டியது. 31 நாடுகளிலிருந்து வந்த 15 கோடியே 10 இலட்சம் யுவான் மதிப்பான மீட்புதவி பொருட்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளன.
|