ஹாங்காங்கிலுள்ள இந்திய துணைத் தூதரகம் மற்றும் இந்தியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் நேற்று ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்திலுள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தின் சிறப்புப் பிரதிநிதி ஆணையத்துக்குச் சென்று, அங்குள்ள இந்திய நிறுவனங்களின் சார்பில், சிச்சுவான் வென்ச்சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 7 இலட்சம் ஹாங்காங் டாலர் நன்கொடையை வழங்கியுள்ளனர்.
சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கடுமையான உயிரிழப்பு மற்றும் இழப்புக்கு பற்றி ஹாங்காங்கிலுள்ள இந்திய நிறுவனங்கள் மன வருத்தம் தெரிவித்தன. நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்தி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அவை தெரிவித்தன. சீன அரசும் மக்களும் இன்னல்களைச் சமாளித்து, தாயகத்தை மறுசீரமைப்பதில் நம்பிக்கை வைத்துள்ளதாக இந்திய தரப்பு தெரிவித்தது.
அண்மையில், அங்குள்ள தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளின் துணைத் தூதரங்கள் ஹாங்காங்கிலுள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தின் சிறப்புப் பிரதிநிதி ஆணையத்துக்கு சென்று நன்கொடைகளை வழங்கி, சீன பேரிடர் நீக்கம் மற்றும் மறுசீரமைப்புப் பணிக்கு ஆதரவு அளித்தன என்று இந்த ஆணையம் தெரிவித்தது.
|