• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-28 11:06:29    
நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது நேயர்கள் செலுத்தும் அக்கறை

cri

சீன வானொலி நிலையம் ஏற்பாடு செய்த"ராட்சத பாண்டாவின் ஊரான சிச்சுவான்" என்ற பொது அறிவு போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற பத்து வெளிநாட்டு நேயர்கள் சீன வானொலி நிலையத்தின் அழைப்பை ஏற்று, கடந்த ஆண்டு சிச்சுவான் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டனர். உள்ளூர் பிரதேசத்தின் அழகான இயற்கை காட்சிகளும், வரவேற்கும் மனபாங்கும், சுறுசுறுப்பும் உள்ள மக்களும், அவர்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளனர். மே திங்கள் 12ஆம் நாள் சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் கடும் நில நடுக்கம் நிகழ்ந்த பின், இந்த பத்து நேயர்களும், தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் சீன வானொலி நிலையத்துடன் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளனர். விரைவாக சீன மக்கள் பேரழிவை வென்று, மேலும் அருமையான சிச்சுவானை மீண்டும் உருவாக்குவது உறுதி என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

நில நடுக்கம் பற்றி கேட்டதும், இந்திய நேயர் N. பாலகுமார் உடனடியாக சீன வானொலி நிலையத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, பேரழிவு நிலைமை பற்றி கேட்டறிந்தார். அவர் கூறியதாவது:

"உலகில் இயற்கை சீற்றத்தால் மனிதன் உயிர் பலியாகும் பொழுது எல்லாம் என் மனம் வேதனை அடையும். அந்த வகையில் சிச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த நில நடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை கேட்டு மனம் வேதனை அடைகிறது. அடுத்த இரு திங்களில் மாபெரும் ஒலிம்பிக் விளையாட்டு விழா நடைபெறும் சமயத்தில் இப்படி ஒரு அசம்பவம் நடந்தது வருத்தத்திற்குரிய விஷயம் தான். சீன மக்களின் மன உறுதியை வெளிக்காட்டியது. நில நடுக்கத்தில் உயிர் இழந்தோர் குடும்பத்தினருக்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். நில நடுக்கம் நடந்த நாளிலிருந்து தொலைக்காட்சி வழியாகவும், பத்திரிக்கை வழியாகவும் நில நடுக்கக் காட்சிகளை பார்த்து பார்த்து மனம் வேதனை அடைகிறது. ஒரே ஆறுதல் மீட்புப் பணிக்குத் தலைமை தாங்கிய வென்சியாபாவ் அவர்களால் விரைவில் இயல்பு வாழ்க்கை திரும்பும் என்ற நம்பிக்கை ஒளி தெரிகிறது" என்றார், அவர்.

ருமேனிய நேயர் Dumitru Marin பேசுகையில், சீன வானொலி நிலையத்தின் மூலம், நில நடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"நில நடுக்கம் நிகழ்ந்த ஒரு மணி நேரத்துக்கு பின், ருமேனிய தொலைக்காட்சி நிலையத்தின் செய்தி அறிக்கை நிகழ்ச்சியில் அது பற்றி அறிந்தேன். எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்கள் சார்பாக, பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்களுக்கும், குறிப்பாக மாசற்ற குழந்தைகளுக்கு உளமார்ந்த வணக்கங்களையும், உயிரிழந்தோருக்கும் மிக ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கின்றேன்" என்றார், அவர்.

ரஷிய நேயர் Novikov Evgeny, ஜெர்மன் நேயர் Dieter Gerhard Leupold, மங்கோலிய நாட்டு நேயர் Samdanmunkh Baatar ஆகியோர் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் சீன வானொலி நிலையத்துடன் தொடர்பு கொண்டனர். சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த நில நடுக்கம் பற்றி மனவருத்தமடைவதாக அவர்கள் தெரிவித்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்கள் வெகு விரைவில் மீட்கப்பட வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

இந்நில நடுக்கம், இத்தாலிய நேயர் Luca Brescianiஐப் பாதித்துள்ளது. கடந்த சில நாட்களாக, சீன வானொலி நிலையத்தின் இணையத் தளம் மூலமாக, மீட்புதவி பணியின் முன்னேற்றத்தில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். அவர் கூறியதாவது:

"இத்தாலிய மொழி இணையத் தளத்தில் சிச்சுவான் நில நடுக்கம் பற்றிய சிறப்பு கட்டுரைகளை வாசித்தேன். அதிக செய்திகள் புகைப்படங்களுடன், பன்முகங்களிலும் காலதாமதமின்றி வழங்கப்பட்டுள்ளன. நில நடுக்கம் பற்றி நான் முழுமையாக புரிந்து கொள்வதற்கு முக்கிய வழியாக இது மாறியது. அதிகமான மீட்புதவிப் பணியாளர்கள் ஒரு நிமிட நேரத்தை கூட வீணாக்கவில்லை. ஏனெனில், அப்போதான நேரம், உயிருக்கு சமமாக பொருட்படுகிறது. அதனால் பலர் உயிர் பிழைக்கக்கூடும். சீன மக்கள், குறிப்பாக சிச்சுவான் மாநிலத்தி்ன் மக்கள், இப்பேரழிவை விரைவில் வென்றெடுக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்" என்றார், அவர்.

சிச்சுவான் மாநிலத்தில் நில நடுக்கம் நிகழ்ந்த பின், சீன அரசு மாபெரும் மீட்புப்பணி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ், தலைமையமைச்சர் வென் சியாபாவ் உள்ளிட்ட தலைவர்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று, பேரிடர் நீக்கப் பணிக்கு வழிகாட்டினர். பெரும் அளவிலான நிவாரணப் பொருட்கள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. மொராக்கோ நாட்டின் நேயர் Idriss Bououdina பேசுகையில், பேரழிவை எதிர்நோக்கி சீன அரசு உடனடியாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், தம்மை மனமுருகச்செய்வதாக கூறினார். அவர் கூறியதாவது:

"பேரிடரின் போது, சீன தலைவர்கள், பொது மக்களுடன் சேர்ந்துள்ளனர். சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரிவித்த ஆறுதலையும், இதர சீனத் தலைவர்கள், அவர்கள் மீது செலுத்திய கவனத்தையும் கண்டு, எனது மனம் அன்பு நெகிழ்ந்தது. சீன மக்கள் இந்த பேரழிவிலிருந்து விரைவில் விடுபடுவது உறுதி" என்றார், அவர்.

கடந்த ஆண்டு சிச்சுவான் மாநிலத்தில் பயணம் செய்த இந்த பத்து நேயர்கள், பாதிக்கப்பட்ட சீன மக்களுக்காக இறைவேண்டல் செய்வதைத் தவிர, அவர்களில் சிலர், தத்தமது நாடுகளில், உதவித்தொகை அளிக்கும் நடவடிக்கையை துவக்கியுள்ளனர். அமெரிக்காவில் வாழும் சீன வம்சாவழியைச் சேர்ந்த நேயர் Ling Jiang, ஒரு சீன மொழி பள்ளியின் ஆசிரியராக பணி புரிகிறார். நில நடுக்கம் நிகழ்ந்த பின், சிச்சுவான் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், நண்கொடையாக உதவித்தொகை வழங்கும் நடவடிக்கையில் அவர் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டுள்ளார். அவர் கூறியதாவது:

"வெளிநாட்டில் வாழும் சீனர்களில் ஒருவராக, தாய்நாடு இன்னல்மிக்க நிலையில் சிக்கிக்கொண்டிருக்கும் போது, அதன் பேரிடர் நீக்கப் பணிக்கு பங்காற்றும் கடப்பாடு எனக்கு உண்டு" என்றார், அவர்.

வியட்நாம் நேயர் Le Thi Kim Giang, சீனாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய, தன்னால் இயன்றதனைத்தையும் செய்கின்றார். அவர் கூறியதாவது:

"இக்காலத்தில், உதவித்தொகையை அளிக்குமாறு எனது நண்பர்களுக்கும் எனது மாணவர்களுக்கும் வேண்டிக் கொள்வது மட்டுமே தாம் செய்யக்கூடிய ஓரே ஒரு விடயமாகும். இது பெரும் தொகை அல்ல என்றாலும், எங்களது இரக்க உணர்வை வெளிப்படுத்தும். என்னை போல், நேயர்கள் பலர் இதே விருப்பம் கொண்டிருக்கின்றனர் என்று நம்புகின்றேன்" என்றார், அவர்.

சீனா இக்கடும் நில நடுக்கத்துக்குள்ளாகிய போது, உலகளவில் உள்ள மக்கள், சீன மக்களுக்கு மிக பெரிய ஆதரவும் உதவியும் அளித்துள்ளனர். ஈரான் நாட்டின் நேயர் Mohammad Homayoun Mehr, "இந்த கடினமான நேரத்தில், எனது மனம், சீன மக்களுடன் இணைந்துள்ளது" என்று கூறினார்.