• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-28 09:11:23    
சீனாவிலுள்ள கியூப தூதரின் கருத்து

cri
சீனா, ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கான திறமை கொண்டிருப்பதை பேரிடர் நீக்க பணிகளில் சீன அரசு மேற்கொண்ட சிறந்த நடவடிக்கைகள் முழுமையாக கோடிட்டுக்காட்டியுள்ளன. சீனாவிலுள்ள கியூப தூதர் Pereira, பெய்சிங்கில் எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு கூறினார்.
கடந்த சில நாட்களில், சீனாவில் ஏற்பட்ட பல சிக்கல்கள் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதைப் பாதிக்கவில்லை. சீன அரசின்

தலைமையிலான சீன மக்கள் இன்னல்களை சமாளிப்பது உறுதி என்பதில் Pereira முழுமையான நம்பிககை தெரிவித்தார். பேரிடர் நீக்க பணிகளை சீன அரசு பயனுள்ள முறையில் ஏற்பாடு செய்வது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாகும். வரலாறு கண்டிராத மிக வெற்றிகரமான ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை பெய்சிங் நடத்தும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன் என்றார் அவர்.
வளரும் நாடுகளின் சார்பில் சீனா ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்வதற்கு Pereira மனநிறைவு தெரிவித்தார்.

வளரும் நாடுகளின் தலைசிறந்த பிரதிநிதியான சீனாஒலிம்பிக் விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்வது, உலக முன் மாதிரியாக மாறும். 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு பின், ஒலிம்பிக் எழுச்சி மேலும் அதிகரிக்கும் என்றார் அவர்.
இத்துடன் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு செய்திகள் நிறைவு பெறுகின்றன.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெற வேண்டுமென மெக்சிகோ உளமார விரும்புகின்றது. சீனாவிலுள்ள மெக்சிகோவின்

தூதர் Guajardo, பெய்சிங்கில் எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு கூறினார்.
40 ஆண்டுகளுக்கு முன், ஒலிம்பிக் விளையாட்டு போட்டி முதலாவதாக நடைபெற்ற வளரும் நாடாக மெக்சிகோ மாறியது. தற்போது, ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை சீனா வரவேற்கின்றது என்று Guajardo சுட்டிக்காட்டினார். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை சீனா நடத்துவதற்கு மெக்சிகோ ஆதரவு அளித்து வருகின்றது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஒரு மாபெரும் விழாவாகும். சீன மக்களுடன் இணைந்து, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நாங்களும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றோம் என்றார் அவர்.