• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-28 17:43:51    
உதவி பொருட்களின் பயன்பாடு

cri

மே 12ம் நாள் சீனாவின் சிச்சுவான் வென்சுவான் கடும் நிலநடுக்கம் ஏற்பட்ட பின் சர்வதேச சமூகம் அடுத்தடுத்து உதவிக் கரம் நீட்டி பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கியுள்ளது. மே 26ம் நாள் வரை மொத்தம் 31 நாடுகள் ஐ.நாவின் அகதி விவகாரங்களை கையாளும் பணியகம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள், ஹாங்காங், மகௌ, மற்றும் தைவான் பிரதேசங்கள் ஆகியவை சிச்சுவான் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நன்கொடையாக 81 தொகுதிப் பொருட்களை அனுப்பியுள்ளன. பொருட்களின் எடை 2700 டன்னை தாண்டியது. இந்த நிவாரணப் பொருட்கள் வந்த வண்ணம் இருக்க உடனே தேவைப்படும் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அவற்றை ஏற்றுக் கொள்ளும் போக்கில் சீன தூதான்மை, சுங்க துறை, நோய் பரிசோதனை மற்றும் தடுப்பு வாரியங்கள் விமான நிலையங்கள் முதலிய துறைகள் இரவு பகலாக அலுவலில் ஈடுப்பட்டு விண்ணப்பத்தை எளிமையாக்கி பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான சிறப்பு நெறியை திறந்து வைத்துள்ளன. விளைவாக உதவிப் பொருட்கள் சீக்கிரமாக பொது மக்களுக்கு அனுப்புவது உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது.
சிச்சுவான் மாநிலத்தின் நோய் பரிசோதனை மற்றும் தடுப்புக்கு பொறுப்பான தலைமை ஆணையத்தின் பணியாளர் து யு இது பற்றி கூறியதாவது.
 

சாதாரண நாட்களில் பொருட்கள் வைக்கப்படும் கிடங்குகளிலும் அலுவலகத்திலும் விண்ணப்ப அறிக்கைகளையும் பொருட்களையும் உறுதிப்படுத்திய பின் அனுமதி வழங்குகின்றோம். இப்போதான சிறப்பு தருணத்தில் நாங்கள் விமான நிலையத்துக்கு சென்று விமானங்களிலேயே நிவாரணப் பொருட்களை உறுதிப்படுத்திய பின் அனுமதி வழங்குகின்றோம். பொது வாக கூறின் மிக குறுகிய நேரத்தில் உதவி பொருட்களை பொதுமக்களுக்கு அனுப்புவதை உத்தரவாதம் செய்கின்றோம் என்றார் அவர்.
மே 18ம் நாள் இத்தாலி அரசு வழங்கிய முதலாவது தொகுதியில் 240 கூடாரங்கள் சங்து நகருக்கு சென்றடைந்த பின் உள்ளூர் அரசு உடனடியாக அவற்றை கடுமையாக பாதிக்கப்பட்ட மியன்யாங் மற்றும் தே யாங் இடங்களுக்கு அனுப்பியது. அந்த கூடாரங்களை கொண்டு இவ்விரண்டு இடங்களின் கல்வி வாரியங்கள் 20க்கும் மேற்பட்ட கூடாரப் பள்ளிகளை நிறுவியுள்ளன. சிச்சுவான் மாநிலத்தின் கல்வி ஆணையத்தைச் சேர்ந்த பேரிடர் நீக்க பணி குழுவுறுப்பினர் சியான் வெய் சியுன் கூறியதாவது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வகுப்பு நடத்துவதற்கு இடமில்லை. இத்தாலி அனுப்பிய கூடாரம் மிக பெரியது. அவை வகுப்பு நடத்துவதற்கும் மாணவர்களுக்கு உள நல உதவியளிப்பதற்கும் துணை புரியும். ஆகவே இயன்றதனைத்தையும் செய்து கூடார பள்ளிகளை நிறுவியுள்ளோம் என்றார் அவர்.
இத்தாலி அனுப்பிய கூடாரங்கள் சரியான நேரத்தில் வந்தடைந்தன. நிலநடுக்கம் நிகழ்ந்த பின் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கூடாரங்கள் மிகவும் அடிப்படை தேவைபாகியுள்ளன. பகலில் இது வகுப்பறையாக பயன்படுத்தப்படலாம். இரவில் பொது மக்கள் தங்கியிருக்கலாம். இது பற்றி அவர் கூறியதாவது.
இந்த கூடாரங்கள் வீடு வாசலின்றி அல்லல்படுகின்ற பொது மககளுக்கும் வகுப்பறை இழந்த மாணவர்கள் உடனடியாக வகுப்பை மீட்டு கல்வியளிவு பெறவும் மிகவும் உதவி வழங்கியுள்ளன என்றார் அவர்.
மியன் சூ சியோதெ பள்ளிக் கூடம் இந்த கூடார உதவியை பெற்ற பள்ளிகளில் ஒன்றாகும். அதன் தலைமை ஆசிரியர் ச்செ பாங் அது பற்றி கூறியதாவது.

நாங்கள் நேரடியாக கல்வி ஆணையம் மற்றும் பேரிடர் நீக்க தலைமையகத்திலிருந்து கூடாரங்களை பெற்றோம். ஆசிரியர்களை அணித்திரட்டி அந்த கூடாரங்களை பொருத்தி நிறுவியுள்ளோம் என்றார் அவர்.
சர்வதேச சமூகம் வழங்கிய நன்கொடை பொருட்கள் பாதிக்கப்பட்ட பொது மக்களின் வாழ்க்கை அமைதியாவதற்கு மாபெரும் துணை புரிந்துள்ளன. தொடர்ந்து சர்வதேச சமூகத்திடமிருந்து ஆதரவு பெற மக்கள் விரும்புகிறார்கள். சிச்சுவான் மாநில அரசு மக்களுக்கு செவ்வனே சேவை புரிந்து பாதிக்கப்பட்ட மக்கள் நிதானம் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு உத்தரவாதம் பெற கூடிய வாழ்க்கையை கூடியவிரைவில் ஏற்படுத்த விரும்புகின்றது என்று 27ம் நாள் சங்து நகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.