சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் வென்ச்சுவான் நிலநடுக்கத்துக்கு பின், வெளிநாட்டில் உள்ள சீனர்கள், சீன நிறுவனங்களின் பணியாளர்கள், சீன மாணவர்கள் ஆகியோர் அதில் மிகவும் கவனம் செலுத்தியுள்ளனர். அவர்கள் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தியதோடு, பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தொடர்ந்து பொருட்களையும் நிதியுதவியையும் வழங்கி வருகின்றனர்.
கடந்த 3 நாட்களில், நியூசிலாந்தின் மிக பெரிய நகரான அவுக்லாந்தில், 4000 கூடாரங்களும் 4800அடி மெத்தைகளும் திரட்டப்பட்டுள்ளன. 26ம் நாள் வரை, உள்ளூர் சீனத் துணைத் தூதரகம் 18இலட்சம் நியூசிலாந்து டாலரை உதவித் தொகையாக ஏற்றுக்கொண்டது. பானாமாவிலுள்ள சீனர்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 2.5இலட்சம் அமெரிக்க டாலர் நன்கொடை நிதியை வழங்கினர்.
25ம் நாள் வரை, போர்ச்சுக்கல்லில் உள்ள சீனர்கள் வழங்கிய நிதித் தொகை 22இலட்சம் யுவானுக்கு மேலாகும். தவிர, இது வரை கம்போடியாவின் பல்வேறு துறைகள் அளித்த 12.5இலட்சம் அமெரிக்க டாலர் அந்நாட்டிலுள்ள சீன தூதரகத்துக்கு அனுப்பப்பட்டது.
|