• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-28 10:18:25    
சீனாவின் நன்றி

cri

சீனாவின் நிலநடுக்கப் பிரதேசங்களுக்கு உதவி வழங்கிய நாடுகள், அமைப்புகள், தனி நபர்கள் அனைவருக்கும், சீனா மீண்டும் உளமார நன்றி தெரிவித்தது. நேற்று பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சின் காங் இவ்வாறு கூறினார்.

வெளியுறவு அமைச்சின் தற்போதைய புள்ளிவிபரங்களின் படி, 155 நாடுகளின் அரசுகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், 10க்கு அதிகமான சர்வதேச மற்றும் பிரதேச அமைப்புகள் ஆகியவை சீனாவுக்கு நிதிவுதவி வழங்குவதாக விருப்பம் தெரிவித்துள்ளன. இவ்வுதவித் தொகை சுமார் 190கோடி யுவானாகும். தவிர, 54நாடுகளின் அரசுகள் மற்றும் அரசு சாரா அமைப்புகள், நிவாரணப் பொருட்களை வழங்குவதாக விருப்பம் தெரிவித்துள்ளன. இப்பொருட்களின் விலை 52.4கோடி யுவானுக்கு சமமாகும். வெளிநாடுகள் வாக்குறுதியாக வழங்கிய 2.1இலட்சம் கூடாரங்களில், 47ஆயிரத்து900 கூடாரங்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் உள்ள சீனர்கள், சீன நிறுவனங்களின் பணியாளர்கள், சீன மாணவர்கள் ஆகியோர் இதில் மிகவும் கவனம் செலுத்தியுள்ளனர். நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவர்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தொடர்ந்து பொருட்களையும் நிதியுதவியையும் வழங்கி வருகின்றனர். கடந்த 3 நாட்களில், நியூசிலாந்தின் மிக பெரிய நகரான அவுக்லாந்தில், 4000 கூடாரங்களும் 4800அடி மெத்தைகளும் திரட்டப்பட்டுள்ளன. 26ம் நாள் வரை, உள்ளூர் சீனத் துணைத் தூதரகம் 18இலட்சம் நியூசிலாந்து டாலரை உதவித்தொகையாக ஏற்றுக்கொண்டது. பானாமாவிலுள்ள சீனர்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 2.5இலட்சம் அமெரிக்க டாலர் நன்கொடை நிதியை வழங்கினர்.

25ம் நாள் வரை, போர்ச்சுக்கல்லில் உள்ள சீனர்கள் வழங்கிய நிதித் தொகை 22இலட்சம் யுவானுக்கு மேலாகும். தவிர, இது வரை கம்போடியாவின் பல்வேறு துறைகள் அளித்த 12.5இலட்சம் அமெரிக்க டாலர் அந்நாட்டிலுள்ள சீன தூதரகத்துக்கு அனுப்பப்பட்டது.