 இன்று முற்பகல், பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், கிழக்குச் சீனாவின் ஆன் ஹுய் மாநிலத்தின் ஹுவாய்னான் நகரில், வெற்றிகரமாக நடைபெற்றது.
ஹுவாய்னானில் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் துவக்க விழாவுக்கு முன், அனைவரும் சீன வென் ச்சுவான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோருக்கு, ஒரு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

தொடரோட்ட நெறியின் முழு நீளம், 10 கிலோ மீட்டராகும். அதன் முழு போக்கு, 2 மணி 30 நிமிட நேரம் நீடித்தது.
இன்று பிற்பகல், ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், ஆன் ஹுய் மாநிலத்தின் வூ ஹூ நகரில் நடைபெறவுள்ளது.
|