• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-02 16:25:31    
பழங்காலத்தின் பெய்ஜிங் மாநகரத்தின் தோற்றம்

cri

சீனாவின் தலைநகரான பெய்ஜிங் மாநகரத்தை நினைக்கும் போது, 600 ஆண்டு வரலாறு கொண்ட பண்டைய அரண்மனையான தடுப்பு நகரம் மக்கள் மனதில் தோன்றுகின்றது. இந்தத் தடுப்பு நகருக்கு தென் பகுதியிலுள்ள பெய்ஜிங் qianmen வீதி, நன்கு பாதுகாக்கட்டுள்ள பழங்கால பெய்ஜிங் மாநகரத்தின் பண்பாட்டுத் தோற்றங்களில் ஒன்றாகும். அண்மையில், qianmen பகுதி பல மறுசீரமைப்புகள் மூலம், முந்தைய வணிக வீதியின் வரலாற்றுத் தோற்றத்தை மீண்டும் பெற்றுள்ளது. இதனால்தான், பண்டைய பெய்ஜிங் பற்றிய நினைவுகள் பெய்ஜிங் மக்கள் மனதில் தோன்றுகின்றன.

கி.பி 15ம் நூற்றாண்டின் துவக்கக் காலத்தில், ming வம்சத்தின் தலைநகர் பெய்ஜிங்கில் நிறுவப்பட்டது. Ming, qing வம்சங்களின் நூற்றுக்காணக்கான ஆண்டுகளில், qianmen பகுதி, பெய்ஜிங் மாநகரத்தின் மிக பரபரப்பான, மிக கோலாகலமான பகுதியாக விளங்கியது. இந்த இரண்டு வம்சங்களின் முக்கிய அரச வாரியங்கள் இப்பகுதியில் உருவாக்கப்பட்டன. பல கடைகள், உணவுவகங்கள், பொழுது போக்கு இடங்கள் ஆகியவை கொண்ட வணிக வீதி இங்கே அமைந்திருந்தது. பதிவுகளிப்படி, அப்போது சில சதுர கிலோமீட்டர் பரப்புடைய இப்பிரதேசத்தில் நாட்டின் பல்வேறு இடங்கள் இங்கு சுமார் 140 வணிக் குழு மண்டபங்களை நிறுவியுள்ளன.

சமூகத்தின் வளர்ச்சியோடு, பெய்ஜிங் மாநகரம் உலகில் புகழ் பெற்ற நகரமாக மாறியுள்ளது. இம்மாநகரத்தில் கணிசமான வணிக வர்த்தகப் பிரதேசங்கள் உள்ளன. அதேவேளையில் qianmen வீதியின் சந்தை மந்த நிலையில் காணப்பட்டது. பழங்கால கட்டிடங்கள் கடுமையாக சீர்குலைக்கப்பட்டன. Qianmen வீதியிலுள்ள சுமார் 70 விழுக்காட்டு வீடுகள் அபாய நிலையில் இருந்தன. எனவே, புகழ் பெற்ற பெய்ஜிங் மாநகர வரலாற்றப் பண்பாட்டு நகரத்தின் தோற்றத்தைப் பாதுகாக்கும் வகையில், இப்பிரதேசத்தில் பெரும் அளவு மறுசீரமைப்புத் திட்டப்பணிகள் கடந்த ஆண்டில் துவங்கின.

நண்பர்களே, பண்டைய பெய்ஜிங் மாநகரத்தின் தோற்றம் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.