சீனப் புத்த மதத் துறை இன்று சிச்சுவான் மாநிலத்தின் chengdu நகரத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு இறைவேண்டல் கூட்டத்தை நடத்தியது.
ஹாங்காங், மகௌ, தைவான் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த மூத்த மத குருமார், புத்த மத நம்பிக்கையாளர் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். 2 கோடி யுவான் நன்கொடை இக்கூட்டத்தில் திரட்டப்பட்டன. புள்ளிவிபரப்படி, இது வரை, சீனப் புத்த மதச் சங்கம் ஏற்பாடு செய்வதன் மூலம் 15 கோடியே 50 இலட்சம் யுவான் நன்கொடை திரட்டப்பட்டன. தைவான் புத்த மதத் துறை 4 கோடி யுவானை வழங்கி, ஹாங்காங் புத்த மதத் துறை 2 கோடியே 70 இலட்சம் யுவான் நன்கொடை மற்றும் உதவிநிதியை அளித்தது.
|