நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் மக்களுக்கும் பேரிடர் நீக்க நிதியும் பொருட்களும் உண்மையாக பயன்படுத்தப்படும் வகையில், பேரிடர் நீக்க உதவிப் பொருட்களின் கண்காணிப்பை பயன்தரும் முறையில் வலுப்படுத்த வேண்டும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கட்டுப்பாட்டுக் கண்காணிப்பு கமிட்டியின் தலைவருமான ஹே கோச்சியாங் நேற்று பெய்சிங்கில் இதை வலியுறுத்தினார்.
பேரிடர் நீக்க உதவிப் பொருட்களின் கண்காணிப்புப் பணிக் கூட்டம், நேற்று பெய்சிங்கில் நடைபெற்றது. பேரிடர் நீக்க உதவி நிதி மற்றும் பொருட்களைக் கண்காணிக்கும் தலைமைக் குழுவை உருவாக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் ஹே கோச்சியாங் சுட்டிக்காட்டினார். விதி முறைகளை உருவாக்கி முழுமையாக்க வேண்டும். சிறப்புத் தணிக்கையை நடத்த வேண்டும். பேரிடர் நீக்க உதவி நிதி மற்றும் பொருட்களின் காலதாமதமற்ற ஒதுக்கீட்டையும் பயனுள்ள பயன்பாட்டையும் உத்தரவாதம் செய்ய வேண்டும்.
|