
Liu minying அரசு உயிரின பாதுகாப்புப் பண்ணை, பெய்சிங்கின் தெற்கிழக்குப் பகுதியின் da xing மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதன் நிலப் பரப்பு, 2120 மோ ஆகும். விளை நிலப் பரப்பளவு, 1650 மோ ஆகும். 1987ம் ஆண்டு ஜூன் திங்கள் 5ம் நாள், ஐ.நாவின் சுற்றுலா திட்டமிடல் அலுவலகம் இந்த பண்ணையை தலைசிறந்த 500 உலகச் சுற்றுசூழல் பாதுகாப்பு மாதிரிகளில் ஒன்றாக அறிவித்துள்ளது. கடந்த பல பத்து ஆண்டுகளின் உயிரின பாதுகாப்பு வேளாண் கட்டுமானத்தின் மூலம், அதன் சிறப்பு மேம்பாடு, பொருளாதார வளர்ச்சியின் புதிய அதிகரிப்பு புள்ளியாக மாறி வருகின்றது. இது, பிரதேச வரி வருமானத்தின் அதிகரிப்பை பயன்தரும் முறையில் உயர்த்தியுள்ளது.
 பல்லாண்டு தால கட்டுமானத்தின் மூலம், இந்த பண்ணையில் முழமையான அடிப்படை வசதிகள் உண்டு. போக்குவரத்தும், தொலை தொடர்பும் வளர்ச்சியடைந்துள்ளன. அத்துடன், இது, சிறந்த முதலீட்டுச் சூழல் வாய்ந்தது. நீண்டகால உயிரின பாதுகாப்பு வேளாண் கட்டுமானத்தின் மூலம், இந்த பண்ணை, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தியுள்ளது மட்டுமல்ல, உயிரின வாழ்க்கைச் சூழலையும் சீராக்கியுள்ளது. நாள்தோறும், சோதனைப் பயணம் மேற்கொள்ளும் வகையில், சீன மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் இந்த பண்ணைக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். ஆண்டுதோறும், சுமார், 40 ஆயிரம் பேர், இங்கு வருகின்றனர். ஏனென்றால், Liu minying அரசு உயிரின பாதுகாப்புப் பண்ணை, மிகப் பெரிய செல்வாக்கு வாய்ந்தது. இது, சீனா முழுவதும், புகழ் பெற்று, பல்வேறு நிலை தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. Li peng, wei jianxing, chen muhua, li xinming, li qiyan, jia qinglin முதலிய தலைவர்கள், முறையே, இந்தப் பண்ணைக்கு வந்து, சோதனை மேற்கொண்டனர். நுழைவுச் சீட்டு கட்டணம்: பெரியோருக்கு : 20 யுவான், மாணவர்களுக்கும் முதியோருக்கும் இராணுவத்தினருக்கும் பணியிலிருந்து ஓய்வு பெற்றோருக்கும் : 15 யுவான்

|