• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-29 19:24:44    
சான்துங் மாநிலத்தின் விவசாயிகள் இணைய தளத்திலிருந்து வெளியுலகை தெரிந்து தெரிந்து கொண்டுள்ளனர்

cri
தமிழன்பன்.........இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம்.

கலை..........கடந்த நிகழ்ச்சியில் சீன கிராமப்புறங்களில் இணைய தள வளர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சான்துங் மாநிலத்தின் அகன்ற அலைவரிசை இணையத் தளம் பற்றி அறிமுகப்படுத்தினோம்.

தமிழன்பன்.........ஆமாம். நிகழ்ச்சி நிறைவடைகின்ற போது அடுத்த வாரம் விவசாயிகள் இணையத் தளத்தின் மூலம் பெறும் பயன் பற்றி அறிமுகப்படுத்துவோம் என்று அறிவித்தோம். நினைவில் இருக்கிறதா?

கலை.......... நினைவிலுண்டு.

தமிழன்பன்.........ஆகவே இன்றைய நிகழ்ச்சியில் சான்துங் மாநிலத்தின் விவசாயிகள் இணைய தளத்திலிருந்து வெளியுலகை தெரிந்து தெரிந்து கொண்டுள்ளனர் என்பதை பார்ப்போம்.

கலை..........துவக்கத்தில் விவசாயிகள் எப்படி அகன்ற அலைவரிசை இணையத் தளத்தை பயன்படுத்த முடியும் என்பதை சான்துங் இணையத் தளத்தின் பணியாளர்கள் ஆலோசனை செய்தனர்.

தமிழன்பன்.........அவர்கள் விவசாயிகளுக்கு கணினி எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி பயிற்சி வகுப்புகள் நடத்தினர்.

கலை..........இலவச வகுப்பில் தொழில் நுட்ப பணியாளர்கள் விவசாய்களுக்கு விளக்கங்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகள் மூலம் விவசாயிகளுக்கு இணையத் தளத்தை பயன்படுத்தி தகவல்களை பெறுவது பற்றி கற்பித்தனர்.

தமிழன்பன்.........கற்பிக்கின்ற அதேவேளையில் விவசாயிகள் ஆர்வம் காட்டிய தகவல்களை சேகரித்து அவர்களுக்கு வழங்கினர்.

கலை..........விவசாயிகள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற்று கற்றுக் கொண்ட பின்னர் கணினி பயன்படுத்தும் ஆர்வம் அதிகரித்துள்ளது

தமிழன்பன்.........விவசாயிகளிடையில் கணினி மூலம் வியாபாரம் செய்வது பற்றிய தகவல்களை நேயர் நண்பர்களுக்கு அறிமுகபடுத்தலாமே.

..............இசை..............

கலை..........சீனாவின் சான்துங் மாநிலத்தின் சி ஹு மாவடத்தின் சோ சியோ கிராமத்தில் வாழ்கின்ற zhu wen bo என்னும் விவசாயி கோழி வளர்ப்பில் ஈடுபடுபவர்.

தமிழன்பன்.........அவர் 3000 கோழிகள் வளர்க்கின்றார். அவற்றை விற்பனை செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகின்றார்.

கலை..........உடனே அவர் கணினி மூலம் இணைய தளத்தில் சான்துங் மாநிலத்தின் தெ சோ நகரில் கோழி விற்பனை பற்றிய தகவலை அறிந்தார்.

தமிழன்பன்.........இந்த தகவலை பயன்படுத்தி நல்ல விலையில் வியாபாரம் அவர் செய்தார்.

கலை..........சி ஹோ மாவடத்தில் இயங்குகின்ற சி ஹோ இணைய தளம் மாவட்டத்தில் வாழ்கின்ற விவசாயிகளுக்கு 5 கணினி களை பொருத்தியுள்ளது.

தமிழன்பன்.........அத்துடன் கிராம வாசிகளுக்கு இணைய தளம் பற்றிய அறிவையும் கற்பிக்கிறது.

கலை..........சிஹோ மாவட்ட இணைய தளம் விவசாயிகள் கணினி மூலம் வியாபாரம் செய்வதை முன்னேற்றுவதற்கு தகுந்த பங்கு ஆற்றியுள்ளது.

தமிழன்பன்.........சி ஹோ மாவட்ட இணையத் தளம் போல சான்துங் மாநில அரசும் விவசாயிகளுக்கு இணைய தளம் நிறுவுவதற்கு ஆதரவளித்துள்ளது.

...........இசை...........

கலை..........சான்துங் மாநிலத்தின் வெய்சான் மாவடத்தின் சன் லோ கிராம் பன்றி வளர்ப்பில் புகழ் பெற்றது. ஜு என்பவர் 2006ம் ஆண்டில் 100 பன்றிகளை வளர்த்தார். வளர்க்கும் போதே மேலும் கூடுதலாக 300 பன்றிக் குட்டிகளை வாங்கினார்.

தமிழன்பன்.........கணினி மூலம் கற்றுக் கொண்ட அறிவை கொண்டு அவர் மேலும் 2000 கோழிக் குஞ்சுகளை வாங்கினார்.

கலை..........அவைகளுக்கான தீவனங்கள் மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை மட்டுமல்ல பன்றிகளையும் கூட கோழிகளையும் அவர் இணையத் தளத்தின் மூலம் வாங்கி விற்பனை செய்தார்.

தமிழன்பன்.........சான்துங் மாநிலத்தின் தெச்சோவில் வாழ்கின்ற லியூ சின் வூ என்பவர் பன்றி வளர்ப்பில் புதியவராவார். அவர் தனது பன்றி வளர்ப்பு பண்ணையில் 12 ஒளிப்படக் கருவிகளை பொருத்தினார். ஒளிப்பட கண்காணிப்பு மூலம் பன்றிகள் வளர்வதை அறிந்து கொள்கிறார்.

கலை.......... இணையத் தளத்தின் மூலம் வேறு ஊரிலுள்ள விற்போர் வாங்குவோரிடம் தொடர்பு கொண்டு பன்றி வியாபாரம் செய்கிறார்.

தமிழன்பன்.........அது மட்டுமல்ல அவர் வளர்த்த பன்றிகளின் நிழற்படங்கள் இணையத் தளத்தில் வெளியிடப்படுகின்றன.

கலை..........விவேகமான பல வழி முறைகள் மூலம் அவர் வளர்க்கின்ற பன்றிகள் சீனாவின் வடக்கிலுள்ள லோ நின் மாநிலத்திற்கும் ஹோ பே உள்ளிட்ட வேறு மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழன்பன்.........இன பெருக்கம் செய்யும் பன்றி ஒன்றின் விலை சுமார் 3000 யுவானாகும். அவர் இணையத் தளத்தை பயன்படுத்தி குடும்ப பன்றி பண்ணையை நன்றாக நடத்தி வருகிறார்.

..................இசை..............

கலை.......... சான்துங் மாநிலத்தில் வாழ்கின்ற விவசாயிகள் இணையத் தள மயமாக்கமூலம் மீன், பூண்டு, ஆப்பிள், முதலிய வேளாண் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்கின்றார்கள். வாங்குகின்றார்கள்.

தமிழன்பன்.........இதில் யேன் தை இடத்தில் விளையும் ஆப்பிள், ச்சான் சியூ இடத்தில் விளையும் நீள பூண்டு, ஆன் சியூ இடத்தில் விளையும் இஞ்சி போன்ற தனிச்சிறப்பியல்பு மிக்க வேளான் உற்பத்தி பொருட்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பபடுகின்றன. இவையனைத்தும் இணைய தளத்தின் மூலம் கையாளப்படுவது குறிப்பிடத்தக்கது.

கலை..........தகவல் மயமாக்கம் விவசாயிகளுக்கு செழுமையை மட்டுமல்ல நாகரிகத்தையும் கொண்டு வந்துள்ளது.

தமிழன்பன்.........விவசாயிகள் இணைய தளத்தின் மூலம் அறிவியல் தொழில் நுட்பம், பண்பாடு, கல்வி, சந்தை போன்ற தகவல்களை பெற்றுள்ளனர்.

கலை..........இவ்வாறு கல்வி தகவல்களை பெறுவதன் மூலம் விவசாயிகளுக்கு நாள்தோறும் தேவைபடும் தொடர் பயிற்சி நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழன்பன்.........நீங்கள் குறிப்பிட்டது சரிதான்.

கலை..........ஆமாம். முன்பு வேளாண் ஓய்வு நாட்களிலும் சாப்பாட்டுக்கு பின்னர் சில விவசாயிகள் பணம் வைத்து சூதாட்டங்களில் விளையாடினர்.

தமிழன்பன்.........இப்போது விவசாயிகள் கணினி பயன்படுத்தி இணையத் தளத்தில் வெளியாகும் செய்திகளை வாசிக்கின்றனர். வேளாண் அறிவியல் தொழில் நுட்பத்தையும் உற்பத்தி தகவல்களையும் அறிந்து கொள்கின்றனர்.

கலை..........சான்துங் இணையத் தளம் கல்வி, திரைப்பட மற்றும் தொலைக் காட்சித் திரைப்படம், இணைய சேவை வழங்கும் நிறுவனம் முதலிய துறைகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு தேவைபடுகின்ற சேவைகளை உற்சாகத்துடன் வளரகின்றது.

தமிழன்பன்.........ஆமாம். இப்போது சான்துங் மாநிலத்தில் வாழ்கின்ற விவசாயிகள் மேலும் கூடுதலாக இணைய தளத்தை பயன்படுத்தி கல்வியறிவை பெற்று வியாபாரம் செய்து வருகின்றனர்.

கலை..........நேயர்களே சான்துங் மாநிலத்தில் தகவல் துறையின் மயமாக்கம் பற்றி அறிமுகபடுத்தினோம். இதை கேட்ட பின் உங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் அல்லது வான் அஞ்சல் மூலம் தெரிவியுங்கள்.