• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-29 19:28:35    
சிங்கம் என்ன செல்ல பிராணியா ?

cri
ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வீட்டுப் பிராணிகளாகவும், நாய், பூனை ஆகியவற்றை செல்லப் பிராணிகளகவும் வளர்த்து வருவது இயற்கை. சிங்கம், மான் போன்றவற்றை காட்டில் வாழ்கின்ற வனவிலங்குகளாக தான் கேள்விப்பட்டிருக்கின்றோம். மிருகக்காட்சி சாலைகளில் அவைகளை சுற்றுலாவின்போது கண்டுகளித்திருப்போம். ருமேனிய நாட்டிலுள்ள 28 வயதான ஒருவர் இவைகளில் சிலவற்றை தனது தோட்டத்திலேயே வளர்த்து வந்திருக்கிறார். வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் வனவிலங்குகளை வளர்த்ததற்கு அவர் கைது செய்யப்பட்டருப்பதாக உள்ளூர் செய்திஊடகம் தகவல் வெளியிட்டது. அத்தோட்டத்தில் சிங்கத்தின் கர்ச்சனையை கேட்டு பயந்த பக்கத்து வீட்டுகாரர்கள் காவல்துறையில் புகார் கொடுக்க, விசாரணையின்போது அம்மனிதரின் வீட்டுத்தோட்டத்தில் சுற்றிக்கொண்டிருந்த ஒரு பெண் சிங்கம், இருண்டு மான்கள், ஒரு கலைமான் மற்றும் இரண்டு மயில்கள் முதலியவற்றை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். சட்டத்திற்கு புறப்பாக வனவிலங்குகளை வளர்த்து வந்த அந்த மனிதருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்ற எதிர்பாக்கப்படுகிறது.