• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-29 09:23:30    
லியான் யுன்காங் நகரிலுள்ள ஹுவாகோ சான் என்னும் மலை

cri
மேற்கு சுற்றுலாப்பயணம் என்னும் சீனப் புராதன இலக்கியப்படைப்பைப் படித்தால், அதன் நாயகரான குரங்கு மன்னன் சுன், உங்களின் மனதில் ஆழப்பதிவது உறுதி. அவருடைய தாய்வீடு, மலர்களும் பழங்களும் நிறைந்த அற்புதமான மலையாகும். அதன் பெயர் ஹுவா கோ சான். சீன மொழியில் ஹுவா என்றால், மலர். கோ என்றால் பழம். சான் என்றால், மலை என்பது

பொருள். சீனாவின் கிழக்குப்பகுதியிலுள்ள கடலோர நகரமான லியான் யுன்காங்கில், ஹுவாகோ சான் என்னும் மலை அமைந்துள்ளது. இம்மலை, அந்த நாவலின் ஹுவாகோ சான்னுக்கான மலையின் மாதிரியை போன்றே தெரிகிறது.
நாவலில் எழுதப்பட்டுள்ள படி, லியான் யுன் காங்கின் ஹுவாகோ சான், நல்ல காலநிலையையும், அழகான இயற்கை காட்சியையும் கொண்டது.
ஹுவாகோ சான் மலையிலுள்ள, முக்கிய காட்சி இடங்கள் நூறைத் தாண்டியுள்ளன. குரங்கு கல் உள்ளிட்ட பல காட்சிகள், நாவலில்

உள்ளதற்கு பொருந்தியவை. அதில், பயணிகள் மிகவும் விரும்பும் நீர் தட்டி குகை, எல்லாராலும் மிகவும் வரவேற்கப்படுகிறது. செவிவழி கதையில், நீர் தட்டியைக் கொண்ட இந்தக் குகை, குரங்கு மன்னன் சுன், இதர குரங்குகளுடன் இணைந்து விளையாட்டி மகிழும் இடமாகும். குகையில், இயற்கையான கல் மேசை, கல் இருக்கைகள் ஆகியவை ஒழுங்காக உள்ளன. இக்குகை பற்றிய உள்ளூரின் செவிவழி கதை ஒன்றை, வழிகாட்டி Shen hailing எடுத்துக்கூறினார்.
மேற்கு சுற்றுலாப்பயணம் என்னும் நாவலின் நாவலாசியியர் வூ செங் என், இந்த மலையில் அக ஒளி தேடிய போது, இக்குகையில் அவர் ஓய்வு எடுத்தார். ஒரு குழு குரங்குகள், அவருடைய நாவலைப் படித்தன. அப்பெரியவர், இந்தக் குகையில்

நீண்டகாலமாக தங்கிய போதிலும், தம் நாவலில், குரங்கு பற்றி ஏதும் எழுதவில்லை என்பதைக் கண்டறிந்தவுடன், குரங்குகள், அவர் எழுதியதைக் கழித்தெறிந்தன. திரு வூ, அந்நிலைமையைக் கண்டு, கோபமடையவில்லை. அதற்குப் பதிலாக, குரங்கை நாவலின் நாயகராக கொண்டு எழுதினார்.
ஹுவாகோ சான் என்னும் மலையில், எங்கும் குரங்குகளைப் பார்க்கலாம். அவை, இம்மலையின் உரிமையாளர் போல் காணப்படுகின்றன. பயணிகள் அனைவரும் அவற்றினால் ஈர்க்கப்படுகின்றனர். அந்தக் காட்டு குரங்குகள், தலைமுறை தலைமுறையாக அம்மலையில் வாழ்கின்றன. ஒவ்வொரு குரங்குக் குழுவுக்கும், தத்தமது மன்னர் உள்ளார். குரங்கு மன்னரின் தலைமையில், ஒவ்வொரு குரங்கு

குழுவும், தமக்கான நிலையான இடத்தைக் கொண்டுள்ளன என்று வழிகாட்டி Shen hailing அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது:
குரங்குக் குழுக்களுக்கிடையில் தொடர்பு இல்லை. ஒரு குரங்கு குழு, மற்ற குழு கட்டுப்பாட்டின் கீழுள்ள இடத்திற்குச் சென்று, சண்டை மூண்டும். அப்பிரச்சினையின் மீது, எந்த அமைதி உடன்படிக்கையும் வெளி தலையீடும் பயன் தராது என்றார் அவர்.
ஹுவாகோ சான் என்னும் மலையில், அழகான இயற்கை காட்சிகள் மட்டுமல்ல,

அதிகமான பாரம்பரிய கலை வடிவங்களோடு அமைந்த காட்சித்தலங்கள் உள்ளன. மலையிலுள்ள பண்டைக்கால கட்டிடங்கள் தனிச்சிறப்பியல்பு வாய்ந்தவை. இச்சுற்றுலா தளத்தின் சின்னம் போன்ற கட்டிடமான மன்னர் அசோகர் கோபுரம், 1023ம் ஆண்டில் நிறுவப்பட்டுள்ளதால், சுமார் ஆயிரம் ஆண்டு வரலாறுடையது. அதன் உயரம், 10 மீட்டராகும். தவிர, மலையில், ஹேய் நிங் கோயில் அமைந்துள்ளது. அம்மலையில் மிக பெரிய பண்டைக்கால கட்டிடமான இக்கோயில், புகழ்பெற்ற புத்த மத காட்சிதலமாக கருதப்படுகிறது.