• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-29 13:03:38    
அடிப்படை வசதிகளுக்கான சீரமைப்புப் பணி

cri

மே 12ம் நாள் வென்ச்சுவான் மாவட்டத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்துக்கு பின், பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான அடிப்படை வசதிகளுக்கு உத்தரவாதம் அளித்து, புனரமைப்பை முன்னேற்றும் வகையில், சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்த்திருத்த ஆணையம், 20க்கு மேலான வாரியங்கள் இடம்பெறும் தொடர்புடைய பணிக்குழுவை உடனடியாக உருவாக்கியது.

28ம் நாள் வரை, சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான அடிப்படை வசதிகளுக்கான சீரமைப்புப் பணி குறிப்பிட்டகால சாதனைகளை பெற்றுள்ளது. பல்வகை மீட்புதவிப் பொருட்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்த்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் Mu Hong நேற்று பெய்சிங்கில் இவ்வாறு தெரிவித்தார்.

3ஆண்டுகளுக்குள், சிச்சுவான் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான புனரமைப்புப் பணியை அடிப்படையில் நிறைவேற்ற சீன அரசு திட்டமிட்டுள்ளது என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

நிலநடுக்கத்துக்கு பின், அடிப்படை வசதிகளுக்கான உத்தரவாதக் குழுவைச் சேர்ந்த பல்வேறு வாரியங்கள், உடனடிநடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட சாலைகளையும், எரியாற்றல், தொலைத்தொடர்பு மற்றும் நீர் வினியோக வசதிகளையும் பழுதுபார்த்தன. வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்தால் உடைந்த ஏரிகளுக்கான கண்காணிப்பையும் நிகழக் கூடிய இடர்ப்பாடுகளை நீக்கும் பணியையும் தீவிரமாக்கி, வெகு குறுகிய காலத்தில் அடிப்படை வசதிகளை மீட்க பாடுபட்டன. 18ம் நாள் வரை, சிச்சுவான் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட நகரங்கள் மற்றும் மாவட்டங்களிலான தொலைத்தொடர்ப்பு அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளது. 21ம் நாள் வரை, பெய்ச்சுவான் மாவட்டத்தை தவிர, சிச்சுவானில் இதர பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் முழுமையாக அல்லது சில பகுதிகளில் மின்சார விநியோகம் மீட்கப்பட்டது. தவிரவும், உள்ளூர் அடிப்படை வாழ்க்கை பயன்பாட்டுக்கான நீர் விநியோகத்துக்கு அடிப்படையில் உத்தரவாதம்ளிக்கப்பட்டுள்ளது என்று Mu Hong கூறினார்.

16 உயர் வேக நெடுஞ்சாலைகள், 9 இருப்புப் பாதைகள், 21விமான நிலையங்கள் ஆகியவை நிலநடுக்கத்தில் வெவ்வேறான அளவில் நாசமாக்கப்பட்டன. தற்போது, மேற்கூறிய போக்குவரத்து நெறிகள் மீட்கப்பட்டுள்ளன. கடுமையாக பாதிக்கப்பட்ட எல்லா மாவட்டநகரங்களிலும் வெளியூர்களுடன் தொடர்பு கொள்ள தங்கு தடையற்றதாக நிலைநிறுத்துவது என்ற இலக்கு அடிப்படையில் நனவாக்கப்பட்டது என்று Mu Hong சுட்டிக்காட்டினார்.

போக்குவரத்து மீட்கப்பட்டதால், மீட்புதவிப் பணியாளர்களும் பொருட்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்றடைய முடிகிறது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான மக்களுக்கான உணவு தானிய விநியோகத்துக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக, 3லட்சத்து 80ஆயிரம் டன்னுக்கு அதிகமான முதலாவது தொகுதி மீட்புதவி உணவு தானியத்தை சீன நடுவண் அரசு பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வழங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:

உணவு தானியத்துக்கான விநியோகத்தை உத்தரவாதம் செய்ய, நடுவண் அரசு ஒரு பகுதி உணவு தானிய சேமிப்பை பயன்படுத்தியுள்ளது. தற்போதைய நிலைமையில், சிச்சுவான் மாநிலத்துக்கான உணவு தானிய விநியோகம் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது. உணவு தானிய விலை நிதானமாகியுள்ளது என்றார் அவர்.

இருப்பினும், நிலநடுக்கத்தில் சிச்சுவான் மாநிலத்திலான அடிப்படை வசதிகள் கடுமையாக சீர்குலைக்கப்பட்டதால், உள்ளூர் உற்பத்தியை மீட்டெடுத்தல் மற்றும் புனரமைப்புப் பணியின் கடமை மிகவும் கடினமானது என்று Mu Hong வெளிப்படையாக தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

அடி மட்ட நிலை, ஒதுக்குப்புற கிராமங்கள் மற்றும் வட்டங்கள் ஆகியவற்றுக்கு சீரமைப்புப் பணியை முழுமூச்சுடன் விரிவுபடுத்துகின்றோம். தற்போது, இடைவிடா நில அதிர்வுகளால், பேரழிவை தொடர்ந்து பாதிப்புகள் தொடர்கின்றன. குறிப்பாக, வெள்ளப்பெருக்கு காலத்தில் நுழைந்த பின், சிச்சுவான் மாநிலத்தில் மின்னாற்றல், தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்துக்கு உத்தரவாதம் அளிப்பதில் இன்னல் அதிகரித்து வருகின்றது. இருப்பினும், ஏற்கனவேயுள்ள அடிப்படையில், தொடர்புடைய உத்தரவாதப் பணியை நாங்கள் இயன்ற அளவில் செவ்வனே செய்து வருகின்றோம் என்று அவர் வலியுறுத்தினார்.

இது வரையான சீன நடுவண் நிதித் துறையின் புனரமைப்பு ஒதுக்கீட்டுத் தொகை, 7ஆயிரம் கோடி யுவான் ஆகும் என்று தெரிய வருகின்றது. ஒரு மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டத்துக்கு உதவி செய்வது முதலிய ஆதரவு அமைப்பு முறையை சீன அரசு துவங்கியது. தற்போது, சீனா நாடுமுழுவதிலிருந்துமான ஆற்றலை பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவி செய்து புனரமைப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றது.