சிச்சுவான் மாநிலத்தின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட் பிரதேசங்ளுக்கான தைவான் உடன்பிறப்புகளின் கவனம் மற்றும் நன்கொடை குறித்து சீன அரசவையைச் சேர்ந்த தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் yangyi இன்று செய்தியாளர் கூட்டத்தில் நன்றி தெரிவித்தார்.
28ம் நாள் வரை, சீன அரசவையைச் சேர்ந்த தைவான் விவகார அலுவலகம் மற்றும் தைவான் நீரிணையின் இரு கரை உறவுச் சங்கத்துக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த தைவான் உடன்பிறப்புகள் சுமார் 78 கோடி யுவான் நன்கொடையை வழங்கியுள்ளனர். தவிர, செஞ்சிலுவைச் சங்கம், அறக்கொடை ஆகியவை மூலம், கணிசமான நிவாரணப் பொருட்களை அவர்கள் வழங்கியுள்ளனர். கடலில் பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள் தொலைபேசிகள், கூடாரங்கள், மருத்துவச் சிகிச்சைக்கான பொருட்கள், உணவுப் பொருட்கள் முதலியவை இதில் அடங்குகின்றன என்று அவர் கூறினார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் வெகுவிரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு தைவான் செஞ்சிலுவைச் சங்கத்தின் பேரிடர் நீக்கம் மற்றும் மருத்துவச் சிகிச்சைக் குழுக்கள் ஆக்கப்பூர்வமான பங்காற்றியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
|