நாடு முழுவதிலும் முயற்சி மேற்கொண்டு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் புனரமைப்புப் பணியை செவ்வனே செய்ய வேண்டும் என்று நேற்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய குழுவின் தலைவர் சியா சிங்லின் கூறினார். நேற்று, சியா சிங்லின், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று, மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து, பேரிடர் நீக்கப் பணிக்கு வழிகாட்டினார். உள்ளூர் அதிகாரிகள், பொது மக்களை உகந்த முறையில் குடியமர்த்த வேண்டும். குறிப்பாக பேரிடர் நீக்கப் பணியை செவ்வனே செய்வதோடு, உற்பத்தியை வெகு விரைவில் மீட்டெடுக்க வேண்டும் என்று சியாசிங்லின் கோரினார்.
|